சனி, 20 ஆகஸ்ட், 2011

20.08.2011 இன் சிறப்பு செய்திகள்


வெங்காயம் என்றொரு படம் நேற்று வெளியாகியிருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருத்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கு சத்யராஜ் நடித்திருக்கிறார். கழகங்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவு பிரசாரத்தை தனி ஒரு ஆளாக நின்று செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சங்ககிரி ராச்குமார். அதற்காக இது தமிழிலக்கணம் மாதிரி அவ்வளவு வறட்சியான படமல்ல. பொழுதுபோக்கு அம்சங்களும் கலகலப்பு காட்சிகளும் நிறைந்த படம்.

பத்திரிகையாளர்கள் காட்சியில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ராச்குமாரை பாராட்டி மகிழ்ந்த படமும் கூட. இந்த ராச்குமார்தான் இன்று காலை பதினொரு மணிக்கு மண்ணெண்ணை டின்னோடு தீக்குளிக்க கிளம்பியிருக்கிறார். இன்று காலை மீடியா தோழர்களை தொடர்பு கொண்ட ராச்குமார், இந்த அநியாயத்தை தட்டி கேட்டால் சரியான பதில் வர மாட்டேங்குது. தீக்குளிப்பதை தவிர வேற வழியில்ல. அப்படியாவது எனக்கு நியாயம் கிடைக்குதா பார்ப்போம் என்றார் பொங்கி வரும் ஆத்திரத்தோடு.

என்னவாம்? இந்த படத்தின் க்ளைமாக்சில் சாமியார்களை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தி தேவடியாப் பசங்களா என்று திட்டுவது போல காட்சி. இதன் தீவிரத்தையும் அவசியத்தையும் உணர்ந்த சென்சார் அதிகாரிகளே போகட்டும் என்ற அப்படியே இந்த வசனத்தை நறுக்காமல் அனுமதித்துவிட்டார்கள். அப்படியிருக்க, படத்தின் பிரிண்ட்டை க்யூப் சிஸ்டம் மூலம் தியேட்டருக்கு கொண்டு செல்லும் யூ எப் ஓ என்ற நிறுவனம், அந்த ஒரு வசனத்தை மட்டும் சைலண்ட் செய்துவிட்டது.

அரசு அமைப்பான தணிக்கை துறையே ஒப்புக் கொண்ட ஒரு காட்சியை தனியார் நிறுவனம், அதுவும் எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்து தரும் நிறுவனம் நறுக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கொந்தளிக்கிறார் ராச்குமார்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன்புதான் இந்த தீக்குளிப்பை நடத்தப் போகிறாராம் அவர். படைப்பாளியின் சீட்டுக்கு அடியில் பச்சை மிளகாயை கொட்டி ரசிக்கிற இதுபோன்ற ஆட்களை என்ன செய்யலாம்?



ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி 9 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி அலைகள் தாக்கின. இந்த பேரழிவில் சிக்கி இறந்தவர் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. புகுஷிமா அணு உலைகளும் பாதிப்படைந்தன. இதன்பிறகு ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இன்று காலை புகுஷிமாவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து, புகுஷிமா மற்றும் மியாகி கடற்கரைகளை சுனாமி அலைகள் தாக்கலாம் என ஜப்பான் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது. இந்த இரு பகுதிகளும் கடந்த மார்ச் மாதம் வந்த சுனாமியால் வெகுவாக பாதிக்கப்பட்டவை. அரை மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் இல்லை.


இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட கார்கள் சுவிட்சர்லாந்து

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நிலம் மற்றும் நீரிலும் செல்லும் 50க்கும் மேற்பட்ட கார்கள் சுவிட்சர்லாந்து நியூசாடெல் ஏரியில் சென்ற வியாழன்று கொண்டுவரப்பட்டது. அந்த கார்களில் குடைகள்,கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்ததுஅந்த கார்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள்,நாய்களோடு தண்ணீரில் சென்று மகிழ்ந்தனர்.


ஜவுளி, நகை விற்பனையில் மிக பிரபலமான சென்னை சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை நேற்றும் நீடித்தது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத தங்க கட்டிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் Ôசரவணா ஸ்டோர்ஸ்Õ நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. கடைகள், அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட 27 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. வர்த்தகம் செய்தற்கான ரசீது புத்தகங்கள், கம்ப்யூட்டர் சிடிகள் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் கணக்கு காட்டாமல் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கக்கட்டிகள், வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அதிரடி சோதனை வருமானவரித்துறை (புலனாய்வு பிரிவு) உயர் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சோதனையின் கைப்பற்றப்பட்டுள்ள கணக்கில் காட்டப்படாத ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பரிசீலித்த பிறகே வியாபாரத்தின் மூலம் எவ்வளவு வருவாய் வந்தது. வருமானவரி செலுத்தப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது போன்ற அனைத்து விவரங்களும் தெரியவரும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



கழகத்தை நம்பி பயன் இல்லை... இனி கடவுளை நம்புவோம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோயிலில் விசேஷ பூஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்:தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்!

கழகத்தை நம்பி பயன் இல்லை... இனி கடவுளை நம்புவோம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர். ஆம்! கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோயிலில் விசேஷ பூஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

அந்த முன்னாள் அமைச்சர்கள் சாட்சாத் கே.என்.நேருவும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும்தான்.

நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சங்கரன்கோயிலில் உள்ள சங்கரநாராயணர் கோயில். அரியும், சிவனும் ஒன்று என்கிற ஒப்பற்ற தத்துவத்தை விளக்குவது இத்தலம். அனைத்து அரசியல் வி.ஐ.பி.க்களும் இங்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசித்து விட்டு, அம்பாள் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரக் குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். எதிரிகளை வீழ்த்த சத்ரு சம்ஹார பூஜைகள் செய்வதும் வாடிக்கை.

‘இங்கு சென்று விசேஷ பூஜைகள் செய்தால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம்’ என்று யாரோ நேருவின் காதுகளில் ஓத... அவர், ஏற்கெனவே மிரண்டு போயிருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார்.

‘அப்பாடா...! விமோசனம் பிறந்தது’ என்று இருவரும் ஒன்றாக அந்தக் கோயிலுக்குச் செல்வது என்று ‘பிளான்’ போட்டனர்.

அதன்படி, கடந்த 17-ம் தேதி தி.மு.க. கொடி கட்டிய சொகுசு கார்கள் சங்கரநாராயணர் கோயில் முன்பு வந்து நின்றன. தொண்டர்கள் புடை சூழ கோயிலுக்குள் நுழைந்தனர் மாஜிக்கள். தங்கள் கூடவே பட்டர் ஒருவரையும் அழைத்து வந்தனர்.

காரிலிருந்து இறங்கியவர்கள் நேராக சன்னதிக்குச் சென்று சுவாமியையும், அம்பாளையும் தரிசித்தனர். அம்பாள் சன்னதியிலிருக்கும் ஸ்ரீசக்கரக் குழியின் மகிமைகள் பற்றி பட்டர்கள் எடுத்துக் கூற, மாஜிக்கள் இருவரும் பயபக்தியுடன் ஸ்ரீசக்கரக் குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

அதன்பின்னர், கோயிலில் உள்ள சர்ப்ப விநாயகர் சன்னதிக்குச் சென்று ஸ்பெஷல் பூஜைகள் செய்தனர். 51 திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே பக்திப் பரவசமாகியிருந்தனர்.

அப்போது பன்னீர்செல்வத்தைப் பார்த்து, ‘‘நல்லா சாமி கும்பிட்டுக்கப்பா.... யாரு முதலில் உள்ளே போறாங்கன்னு பார்ப்போம்’’ என்று நேரு கிண்டல் செய்ய, பன்னீர்செல்வத்தின் முகம் வெளிறிப்போனது. இரண்டு மணி நேரம் ஸ்பெஷல் பூஜை செய்து விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர்களை மடக்கி நிருபர்கள் கேள்வி கேட்க பதில் சொல்லாமல் சென்று விட்டனர்.

அவர்கள் வந்த நோக்கம் பற்றி தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் மணி பட்டரிடம் கேட்டோம்.

‘‘பொதுவாக கால சர்ப்ப தோஷம் பிடித்தவர்கள் ஜெயிலுக்குப் போவது தவிர்க்க முடியாதது. அந்த கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காகவே சர்ப்ப விநாயகருக்கு ஸ்பெஷல் பூஜைகள், அபிஷேகம் செய்திருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள். அதிலும் இன்று சங்கட ஹர சதுர்த்தி, விநாயகருக்கு உகந்த நாள். இந்த நாளில் சர்ப்ப விநாயகருக்கு பூஜைகள் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை’’ என்றார்.

படம் எடுத்து ஆடி மிரட்டிக் கொண்டிருக்கும் வழக்குகளில் இருந்து நேருவையும், பன்னீர்செல்வத்தையும் சர்ப்ப விநாயகர் காப்பாற்று வாரா...?


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com