அமெரிக்கா இன்று மட்டுமல்ல, இனி எப்போதுமே கடன் நெருக்கடிக்கு ஆளாகாது. அதனால், சீனா தனது முதலீட்டைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை' என, அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் நேற்று தெரிவித்தார்.
சீனாவில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், நேற்று தன் பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன், சீனாவின் தொழில்நகரமான செங்டுவில் பேசிய போது கூறியதாவது: பொருளாதார ரீதியில் இப்போதும் அமெரிக்கா தான் மிகப் பெரிய நாடு. சீனாவை விட இரண்டரை மடங்கு பெரிய நாடு. முதலீட்டாளர்களின் பாதுகாப்பான நாடாக இன்றும் அமெரிக்கா தான் உள்ளது. எனினும் சீனா, அமெரிக்காவில் செய்துள்ள முதலீடு குறித்து கவலை கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் நிதிச் சொத்துகளில் 87 சதவீதமும், நிதியமைச்சக கடன் பத்திரங்களில் 69 சதவீதமும் அமெரிக்கர்களிடம் தான் இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த நிதி சொத்துக்களில் சீனாவிடம் இருப்பது, வெறும் 1 சதவீதம் தான். கடன் பத்திரங்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 8 சதவீதம் தான் என்பதை நினைவூட்டுகிறேன். அதனால், உங்களை மட்டுமல்ல, அமெரிக்க முதலீட்டாளர்களையும் பாதுகாப்பது தான் எங்கள் நோக்கம். அமெரிக்கா ஒரு போதும் கடன் நெருக்கடியில் சிக்கி மூழ்கி விடாது. இவ்வாறு பிடன் தெரிவித்தார்.
அவரது ஐந்து நாள் சுற்றுப் பயணத்தின் போது, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, துணை அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பிடனின் இந்தப் பயணத்தில், அமெரிக்கா - சீனா இடையே ஒரு பில்லியன் டாலர் அளவிற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சீனாவில் இருந்து இன்று காலை, மங்கோலியாவுக்குச் செல்லும் பிடன், நாளை ஜப்பானுக்குச் செல்கிறார்.
பிரிட்டனில் புதிதாக பிறந்த குழந்தை பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தை பிறந்த போது அதன் முன் பகுதியில் இரண்டு பற்கள் இருந்தன.
அந்த பற்களும் முழுமையான அளவில் வளர்ச்சி பெற்று இருந்தன. பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதம் முதல் ஒரு வயது ஆகும் வரை முன் பற்கள் ஏற்படுவது கிடையாது.
அந்த பற்களும் முழுமையான அளவில் வளர்ச்சி பெற்று இருந்தன. பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதம் முதல் ஒரு வயது ஆகும் வரை முன் பற்கள் ஏற்படுவது கிடையாது.
சம்மர் வேலன் என்ற குழந்தைக்கு இரண்டு பற்கள் இருந்தன. இந்த பெண் குழந்தையின் தாய் கரேன், தந்தை அன்ட்டி ஆவார்கள்.
அவர்கள் நியூகேசில் பகுதியில் உள்ள வால்சன்ட் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த குழந்தை கடந்த ஜூலை மாதம் 20ம் திகதி நியூகேசில் றொயல் விக்டோரியா மருத்துவமனையில் பிறந்தது.
இந்த குழந்தையின் பாட்டியான 76 வயது ஷிர்லே பர்னிட் ஹவுடனில் வசிக்கிறார். அவர் பிறக்கும் போதும் இரண்டு முன் பற்களுடன் பிறந்துள்ளார்.
தனது மாமியாரைப் போல தனது குழந்தை சம்மர் வேலனுவும் பிறக்கும் போது இரண்டு முன் பற்களுடன் பிறந்து இறப்பது வேடிக்கையான விடயம் என்று தாய் கரேன் கூறினார்.
இந்த குழந்தையின் பாட்டியான 76 வயது ஷிர்லே பர்னிட் ஹவுடனில் வசிக்கிறார். அவர் பிறக்கும் போதும் இரண்டு முன் பற்களுடன் பிறந்துள்ளார்.
தனது மாமியாரைப் போல தனது குழந்தை சம்மர் வேலனுவும் பிறக்கும் போது இரண்டு முன் பற்களுடன் பிறந்து இறப்பது வேடிக்கையான விடயம் என்று தாய் கரேன் கூறினார்.
தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் கடந்த யூலை 3ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் இங்லக்கின் பியூ தாய் கட்சி ஆளும் கட்சியான ஜனநாயக் கட்சியைத் தோற்கடித்தது.
நாட்டின் மொத்த வாக்கில் ஐந்தில் மூன்று பங்கு வாக்கைப் பெற்று வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 296 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்லக்குக்கு ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 197 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். இதையடுத்து 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று இங்லக் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் சோம்சாக் அறிவித்தார்.
தாய்லாந்தில் 2006ம் ஆண்டில் இருந்தே மறைமுக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. 2006ல் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவைப் பதவி இறக்கிவிட்டு இராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது. பின்னர் சுராயுத் சுலனான்ட் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2008 வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். திடீரென அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சொம்சாய் வோங்சாவத் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான அரசைத் தேர்ந்தெடுக்க கடந்த யூலை 3ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி பிரதிபலித்தது. தாய்லாந்து இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில் இங்லக் ஷினவத்ரா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தை உருவாக்குவதுடன் ஜனநாயக அரசிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாய நிலையில் அவர் உள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக