எனது தந்தை இதுவரை சிறையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது தந்தையைக் காக்க தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து போராட்டம் நடத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ரா.
காஞ்சீபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கோடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி,
தமிழர் நலனுக்கு ஆதரவான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை தூக்கிலிடக்கூடாது என்று தமிழ் நாடு முழுதும் நடந்து வரும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார்.
நேற்று காலை காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தாலுகா அலு வலகம் வந்த அவர் திடீ ரென தன் மீது மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி, அதே இடத்தில் பலியானார். சிவகாஞ்சிபுரம் போலீசார் அவரது கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
செங்கொடியின் கைப்பை உடல் அருகில் கிடந்தது. போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, அதனுள் அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டனர். அந்த கடிதத்தில் தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் என்று செங்கொடி எழுதி இருந்தார்.
இதன் மூலம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக செங்கொடி உயிர்த்தியாகம் செய்திருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல்முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல.
நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் உள்ள பெரியார் தூண் அருகில் செங்கொடி உடல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் திரண்டு வந்து செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை 4 மணி வரை செங்கொடி உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதன் பிறகு அவரது சொந்த ஊரான கீழ்கதிர்பூர் கிராமத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்படும். இன்றிரவு முதல் நாளை காலை வரை உறவினர்கள் அஞ்சலிக்காக செங்கொடி உடல் வைக்கப்பட்டிருக்கும். நாளை பகல் 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.
அதன் பிறகு செங்கொடி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
21 வருட வாழ்க்கை சிறை கம்பிகளுக்குபின்னால் தமது வாழ்கையை கழித்துவிட்ட மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு 11 வருடங்கல்லுக்கு முன் இந்திய ஜனாதிபதி அனுப்பட்ட கருணை மனுஇந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு...
அவர்கள் தண்டனை ஊர்ஜிதப்பட்டு தூக்குகையிற்றை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், உலகத்தில் மிக பெரிய ஜனநாயகநாடாகவும், ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கேட்டு நிற்கும் நாடாகிய இந்தியா மரண தண்டனையை நிறைவேற்றலாமா?

11 வருடங்கள், இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனுஅனுபிவைகப்பட்ட பின், 3ஜனாதிபதிகளுக்கு பின் இன்றைய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டிலால் பேரறிவாளன், சாந்தன், முருகன் முன்வைத்த கருணை மனுநிரகரித்தப்பட்டது.
21 வருட சிறை தண்டனைக்கு பின் இந்த 3தமிழர்களுக்கு தூக்கு தண்டனை தீர்மானமான பின் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், தூக்கு தண்டனைக்கு எதிரானஅமைப்புகள், தமிழ்இளைஜர் அமைப்புகள் என்று எல்லோரும் கட்சி பாகுபாடின்றி தமிழகம் என்றும்போராட்டத்தில் இறங்கினார்கள். மனித சங்கிலி போராட்டம், மோட்டார் வண்டி ஊர்வலப்போரட்டம், உண்ணாவிரதப்
போராட்டம்என்று தமிழகம் எங்கும் போராட்ட களமாக மாறுகிறது.
மீண்டும்நீதிமன்றங்கள் முன் இந்திய முன்னிலை சட்டத்தரணிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தீர்ப்பை தடுத்துநிறுத்தம் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் முன்று இளம் தமிழ் பெண் சட்டத்தரணிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்குதித்தார்கள்.

இந்தபோர்ரட்டங்களுகிடையே காஞ்சிபுரம், ஊரிகையை சேர்ந்த செங்கொடி என்ற 22 வயது சகோதிரி "தோழர்முத்துகுமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்றுநம்பிகையுடன் செல்கிறேன்" என்று எழுதிவைத்து விட்டு தன்னை தீக்கிறைக்கு இரையாகி ஈகைஏந்தினால் இந்த தமிழ் பெண்.
இந்தஇளைஜர்கள் தமிழ் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்தும் தமது உயிரை தியாகம் செய்துகொண்டிருகிறார்கள். உங்கள் உன்னதமான உயிர் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை, தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவை, உங்கள் வாழ்வு தான் அடுத்த விடுதலைஅடைத்த சமுதாயத்தை உருவாக்கம் உதவும். இந்த ௩ தமிழர்களின் விடுதலைக்காக போராடநீங்கள் வேண்டும், தியாகங்கள்போதும் நாம் ஒன்ற இருந்து போராடுவோம் என்று எமது தமிழக உறவுகளுக்கு பிரான்ஸ்தமிழீழ மக்கள் பேரவை சார்பாகவும் உலக தமிழ் மக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கிறோம்.
இன்றுஜனநாயத்தில் முன்னோடிய இருக்கும் நாடுகளில் எல்லாம் மரண தண்டனை சட்டத்தில் இருந்துஅகற்றப்பட்டு கொலைக்கு தண்டனை கொலை அல்ல என்ற புனித யதார்த்தத்தின் அடிப்படையில்மரண தண்டனை அழிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன்பல நிரபராதிகள் இந்த சட்டங்களினால் பாதிக்கப்படுகிறார்கள்.
பலஅரசியல் காரணங்கள், நீதிமன்றங்களில், போலீஸ்இடையே அரசில் கட்சிகளின் மேலாட்சி குற்றம் செய்யாதவர்களை எல்லாம் குற்றவாளிகளாககாணப்பட்டு தண்டிகப்படுகிரார்கள். இன்று பல ஜனநாய நாடுகளில் நீதி துறையில் இருந்துஅரசு பிரிக்கப்பட்டு தனித்தன்மையோடு இயங்குகிறது.
இந்த புது உலகத்தில் கால் பதிக்க நினைக்கும்இந்திய, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம் கேட்டுநிற்கும் இந்திய இன்று இந்த மரண தண்டனை என்ற கோரமான தண்டனையில் இருந்து விடுபட்டுபல ஜனநாயக நாடுகள் போல் மரண தண்டனையை தமது சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றவேண்டும்
மேலயதய நாடுகளில் revising கமிட்டி என்று தீர்ப்புகளில் பிழைகள் இருக்குமானால்அதை மறு பருசீலனை அளிக்க பல வழிகள் உள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகி இந்தியாவில்சட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆளுமை உள்ள நிலையில் ஒரு நிரபராதி தன்னை காப்பாற்றிகொள்ளை என்ன வழி இருக்கிறது என்பது மிகப்பரிய கேள்வி.
இதை மக்கள் சிந்தனையில் எடுத்து கொண்டு சட்டமாற்றங்களை உருவாக்க போராட வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து இவர்களுக்கு ஒரு நியமானதீர்ப்பு கிடைக்கும் வரை, உயிர் தியாகங்களை விட்டு விட்டு தமிழர்கள்எல்லோரும் போராட வேண்டிய நேரமிது.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக