பழனியில் ரஜினியடைய 1050 ரசிகர்கள் மொட்டை போட்டனர்!
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் திரும்பியதால், மகிழ்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்க்ள 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஹெலன் கரோலின் ஆன்னி ஓ ஹகன். கடந்த 1992-ம் ஆண்டு இவ ருக்கு வயிற்றில் ஆபரேசன் நடந்தது. அப்போது ஒரு திராட்சைப்பழ அளவலான “ஸ்பாஞ்ச்”யை அவரது வயிற்றுக்குள் வைத்து டாக்டர்கள் தைத்து விட்டனர்.
அதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டதில் வயிற்று பகுதியில் “ஸ்பாஞ்ச்” இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து மீண்டும் ஆபரேசன் செய்து அது அகற்றப்பட்டது.
அதை தொடர்ந்து ஏற்கனவே ஆபரேசன் செய்த டாக்டர் மீது ஹெலன் கரோலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கிழவரோ, நோயாளியோ, ஊனமுற்றவரோ பரவாயில்லை மகளை சொந்தப் பிள்ளையைப் போல் வேண்டும்!

மகளுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை அமைத்துக் கொடுக்கின்றமைக்காக 80 வயது முதியவர் ஒருவரைக்கூட மறுமணம் செய்கின்றமைக்கு தயாராக உள்ளார் என்று அறிவித்து உள்ளார் இலங்கையரான நடுத்தர வயதுப் பெண் ஒருவர். இவரின் பெயர் ரில்வி ரொமெய்ன் ( வயது - 39 ). பறங்கியர். கிறிஸ்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம், டச்சு போன்ற மொழிகளைப் பேசக் கூடியவர்.
கம்பஹா மாவட்டத்தில் வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது கணவன் கடந்த பெப்ரவரி மாதம் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்து விட்டார். இவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். சர்வதேச பாடசாலை ஒன்றில் பயில்கின்றார். ரொமெய்னின் குடும்பத்தினர் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள். விதி வசத்தால் வறுமை நிலையை அடைந்து இருக்கின்றார்கள். இருப்பினும் மகளுக்கு நல்ல கல்வியை போதிக்க வேண்டும் என்பதில் ரொமெய்ன் பற்றுறுதியாக இருந்து வருகின்றார்.
கணவன் உயிரோடு இருக்கின்றவரை மகளின் கல்வி நடவடிக்கைகளில் சோர்வு ஏற்பட்டு இருக்கவில்லை என்றும் தற்போது வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்ற நிலையில் மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியன கேள்விக்குறியாகி விட்டன என்றும் கவலையுடன் கூறுகின்றார் ரொமெய்ன். இந்நிலையில் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமானம் உடைய ஒருவரை மறுமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து இருக்கின்றார்.
80 வயது கிழவரோ, நோயாளியோ, ஊனமுற்றவரோ என்றால்கூட பரவாயில்லை மகளை சொந்தப் பிள்ளையைப் போல் பார்க்க கூடிய ஒருவரை திருமணம் செய்ய தயார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். வெளிநாட்டவர்கள் அல்லது புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களின் விண்ணப்பங்களைப் பெரிதும் பரிசீலனைக்கு கொள்வார் என்று கூறி உள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக