வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம். ஆகியது.இன்று காலை முதல் நடைபெறும் விசேட பூஜை, அபிஷேகங்களை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் நல்லூர் ஆலய கொடியேற்றத்தில் பங்கெடுத்து இருந்தார்கள்.தொடர்ந்து 25 தினங்களுக்கு நடைபெறவுள்ள நல்லூர் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிநீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. உற்சவகாலத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதுடன், ஆலய வீதிகளில் கண்காணிப்பு வீடியோ கமராக்களை பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் இந்த திருவிழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்க்கப்படுகின்றது










எச்.ஐ.வி தொற்றுடன் பல கனேடியப் பெண்களுடன் உறவு கொண்டு அவர்களுக்கு எயிட்ஸைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர் வசமாக மாட்டிக் கொண்டார். கனடாவில் 11 பெண்களுக்கு எச்ஐவி பரப்பியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் ஜான்சன். கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். ஜான்சனுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது 1996-ம் ஆண்டு தெரியவந்தது. இதை மறைத்து பல பெண்களுடன் உறவு கொண்டார்.
11 பெண்களுக்கு எச்ஐவி பரப்பினார். இதில் 2 பேர் இறந்துவிட்டனர். 2003-ம் ஆண்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஜான்சனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று ஆண்டாரியோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜான்சனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
கனடாவில் ஆயுள் தண்டனை பெறும் கைதிகள் 25 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, பரோலில் செல்ல அனுமதி வழங்கப்படும்.
ஆனால் ஜான்சன் ஆபத்தான குற்றவாளி என அறிவித்த கோர்ட், அவரது பரோல் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. ‘கனடா கோர்ட் விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லை.
உகாண்டா அல்லது கென்யாவில் விசாரணையை சந்திக்கிறேன்’ என்ற ஜான்சனின் வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை வெளியே விடுவது ரிஸ்க் என்று நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக