வியாழன், 18 ஆகஸ்ட், 2011

18.08.2011இன் சிறப்பு செய்திகள்


உலகிலேயே உள்ள அம்மாக்களில் குண்டான அம்மா இவர் தான்!

உலகிலேயே உள்ள அம்மாக்களில் குண்டான அம்மா இவர் தான். ஒருமுறை சுப்பர் மாக்கெட்டுக்கு ஷொப்பிங் செய்யச் சென்றால் ஆறு டிரோலிகளைப் பயன்படுத்தி பிள்ளைகளுடன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார்.

எட்டுமணிநேரம் செலவழித்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார். ஒருநாளைக்கு அவருக்கு 21000 கலோரிகள் தேவைப்படுகின்றது.

32 வயதான இவர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர். தான் எடை கூடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் உணவு அட்டவணையை இங்கே பாருங்கள்...

Breakfast

6 x eggs scrambled, cooked in butter 468 cals

1/2 pound bacon 1,168 cals

4 x potatoes as hash browns 672 cals

6 x pieces toast with butter 600 cals

32 ounce cream shake 1,160 cals

Snacking

1 x bag of animal cookies 1,950 cals

2litre bottle of soft drink 800 cals

1 x 10.5 ounce bag of barbecue flavour crisps 1,650 cals

3 x ham and cheese sandwiches 1,576 cals

Lunch

3 x beef, bean and green chilli burritos with 1 x cup of sour cream 1,453 cals

Salad (1 head lettuce, 1 cup cherry tomatoes, 1 cup carrots, 1 cucumber, 1/2 cup

ranch dressing, bacon bits, 1 cup crumbled cheese, 1 cup chicken 1,479 cals

Dinner

12 x filled tacos + 1 x cup sour cream 4,906 cals

2litre bottle of soda 800 cals

Dessert

8 x scoops vanilla ice cream 2,080 cals

1 x small pan of brownies 1,200 cals

Total 21,962 calories



சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்னம் ஸ்டோர்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, சரவணா ஸ்டோர்கள் அனைத்திலும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

சரவணா குழும உரியமையாளர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.

சென்னையில் உள்ள தியாகராய நகரில் ரெடிமேட் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆபரணங்கள் விற்பனையில் சரவணா குழும ஸ்டோர்கள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நாட்டில், கத்தோலிக்க திருச்சபை சார்பில் உலக இளைஞர் திருவிழா 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 21-ந் தேதி நடக்கும் நிறைவு விழாவில் போப் ஆண்டவர் பெனடிக்ட் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் உள்ள மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போப் ஆண்டவரின் வருகைக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பெயினில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஆடம்பர திருவிழா நடத்துவது தேவையா? என்றும் திருச்சபைகளின் செயல்பாடுகளை கண்டித்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று எதிர்ப்பாளர்கள் ஊர்வலம் சென்ற பாதையில் போப் ஆதரவு யாத்திரிகர்கள் சிலர் ரோட்டோரமாக அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது போராட்டக்காரர் ஒருவர் பாட்டில்களை வீசினார். பதிலுக்கு யாத்திரிகளும் கையில் கிடைத்த பொருட்களை போராட்டக்காரர்கள் மீது வீசி எறிந்தனர்.
பாதுகாப்புக்கு வந்த போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதல் தொடர்பாக போராட்டக்குழுவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றக் கூடிய பிராக்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
பிராக்கள் பெண்களின் மானத்தை காக்கின்றன. ஆனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரதும் உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றக் கூடிய பிராக்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

உயிர் காக்கும் இந்த பிராக்களை உக்ரைய்ன் நாட்டு விஞ்ஞானி ஒருவர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு கண்டுபிடித்து உள்ளார்கள்.

நச்சு வாயுக் கசிவுகள், இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத தாக்குதல்கள் ஆகியவற்றின்போது இவை பாதுகாப்புக் கொடுக்கக் கூடியவை.

இதனால் இவற்றுக்கு அன்ரி வைரஸ் பிராக்கள் என்று பெயர் சுட்டப்பட்டு உள்ளது. சாதாரண பிராக்களின் தோற்றம் உடையனதான் இவையும். பெண்கள் சாதாரணமாக பயன்படுத்த முடியும்.

ஆனால் நச்சு வாயுக் கசிவு, இரசாய மற்றும் உயிரியல் ஆயுத பாதிப்புக்கள் ஏற்படுகின்றபோது இவற்றை உயிர் காக்கின்ற கவசங்களாக பயன்படுத்த முடியும்.

அணிந்து இருக்கின்ற பெண்கள் இலகுவாக இவற்றை மார்பில் இருந்து அகற்றலாம். இரண்டு பாதிகளாக பிய்க்கலாம். ஒரு பாதியை முகத்தில் முகமூடியாக அணிகின்றமையுடன் மற்றப் பாதியை இன்னொருவருக்கு கொடுத்து உதவ முடிகின்றது. சைஸ் ஒரு பிரச்சினையாக இருக்கப் போவது இல்லை.

இவ்வகை பிராக்கள் அமெரிக்கர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வருகின்றன.



ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே இன்று மாலையில் ஜெயில் இருந்து நேராக போராட்டக்களத்திற்கு ஹசா‌ரே வருகிறார். இவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவரது ஆதரவாளர்கள், ஊழலுக்கு எதிராக போராடும் எண்ணம் உள்ளவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கில் திகார் ஜெயில் வாசலில் காலையில் இருந்து கூடியுள்ளனர். இன்னும் திரளானவர்கள் கூடுவர் என்பதை கருத்தில் கொண்ட திகார் ஜெயில் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியே வரும் அவர் திறந்த ஜீப் மூலம் ஆதரவாளர்கள் புடைசூழ டில்லி மைதானத்திற்கு செல்கிறார். பேராட்டக்களத்தில் இருந்துதான் ஜெயிலுக்கு போவார்கள் ஆனால் ஹசாரேயின் போராட்டத்தில் இது மாறியிருக்கிறது.

இவரது வருகைக்காக ராம்லீலா மைதானம் சுத்தம் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திகார் ஜெயில் மற்றும் இதனை சுற்றியுள்ள வளாகத்தில் மோப்ப நாயுடன் ‌சிறப்ப படை போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.திகார் சிறையை விட்டு வெளியே வர மறுத்த அன்னா ஹசாரேயிடம், உண்ணாவிரதத்திற்கு, ராம்லீலா மைதானத்தில் இடம் தருகிறோம். நிபந்தனையை விலக்கிக் கொள்கிறோம் என, டில்லி போலீசார் கெஞ்சிய‌ைதை அடுதத்த்து இவர் இன்று மாலை 3 மணியளவில் வெளியே வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும், சுதந்திர தினத்திற்கு மறுநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தனர். தடையை மீறி, உண்ணாவிரதத்திற்கு செல்ல இருந்த அன்னா ஹசாரேயையும், அவரது குழுவினரையும் போலீசார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.ஹசாரே கைதுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் ஹசாரே விவகாரத்தை கையில் எடுத்து கொண்டு கதிகலங்க செய்ததை பார்த்தும், மத்திய அரசு இறங்கி வந்தது. முதலில், அவரது குழுவினரை விடுவிக்க உத்தரவு போனது.

பின்னர், ஹசாரேயை விடுவிக்க, திகார் சிறைக்கு டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனால், நேற்று முன்தினம், திகார் சிறை முன் ஹசாரேயை வரவேற்க ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். சிறையிலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால், தனக்கு உண்ணாவிரதம் நடத்த அனுமதியளிக்க வேண்டும். அதுவும், நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என, ஹசாரே கோரியிருந்தார். இதனால், டில்லி போலீசார், அவரை சரிக்கட்டுவதில் படாத பாடுபட்டனர். தன் முடிவில் பின்வாங்காத ஹசாரே, அறிவித்தபடி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இதற்கிடையில், திகார் சிறைக்கு வெளியே கூடியிருந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. யோகா குரு ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் வந்து ஆதரவு தெரிவித்தனர்.பேச்சுவார்த்தை: ஹசாரேயை திகார் சிறையிலிருந்து வெளியே போக வைப்பதற்கு, டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் அவருடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தினர்.

உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்பதற்காக கைது செய்த போலீசார், எந்த இடத்தில் உண்ணாவிரதத்தை வைத்து கொள்ளலாம் என, ஹசாரேயுடன் ஆலோசனை நடத்தினர். ஜே.பி.பூங்காவா அல்லது ராம்லீலா மைதானமா என்று பேச்சுவார்த்தை நடந்தது. ஒரே நாளில் போலீசார் அணுகுமுறை மாறியது. முன்னதாக, சிறையிலுள்ள தன் குழு சகாக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். இதற்கு அனுமதியளிக்கவே, இதில் கிரண்பேடி, மனிஷ் சிசோடியா, சுவாமி அக்னிவேஷ் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் அசோக் சந்த் ஆகியோர் பங்கேற்றனர்.நிபந்தனை: போலீஸ் தரப்பில் ஹசாரேயிடம், "உண்ணாவிரதத்தை ராம்லீலா மைதானத்தில் வைத்து கொள்ளலாம். ஆனால் சாகும் வரை உண்ணாவிரதமாக இருக்கக் கூடாது, 15 நாட்களுக்குள் முடிந்து கொள்ள வேண்டும். ‌இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. அரசு தரப்பில் டாக்டர்கள் தொடர்ந்து பரிசோதனை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, நிபந்தனை வைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை நேற்று இரவு வரை தொடர்ந்தது. நிபந்தனைகளை ஏற்காவிட்டால் சிறையில் என் உண்ணாவிரதத்தை தொடர்வேன் என, ஹசாரே பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் , அவசரமாக கைது செய்து இக்கட்டில் சிக்கிய மத்திய அரசு, பல வழிகளிலும் இறங்கிவந்து கெஞ்சியது. பாதுகாப்பு கருதி ராம்லீலா மைதானத்திற்குஉண்ணாவிரதம் வைத்துக்கொள்ளலாம் என்கிறது போலீஸ். இதற்கு ஹசாரே குழுவினர் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உள்துறை செயலர் ஆர்.கே.பிள்ளை, "ஹசாரே நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டு விட்டார். அவர் விரும்பும் இடத்துக்கு செல்லலாம். எந்த இடத்தில் உண்ணாவிரதம் என்பது குறித்து டில்லி போலீசார் பேச்சு நடத்திவருகின்றனர்' என்றார். லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "ஹசாரே, போராட்டம் நடத்த உரிமை உண்டு; ஆனால், ஒரு சில விதிகள் உண்டு' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவு அலை பெருகி போராட்டம் அதிகரித்துவருகிறது. அவரை ஆதரிக்கும் மக்கள், நேற்று இரவு, டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் ஆயிரக்கணக்கில் குழுமினர். இன்று காலை முதல் திகார் ஜெயில் முன்பாக கூடியுள்ளனனர்.ஹசாரே, விரும்பும் இடத்தில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உண்டு - லோக்சபாவில் சிதம்பரம் பேச்சு* உண்ணாவிரதத்தை எந்த இடத்தில் நடத்த அனுமதிப்பது என்பது குறித்து, டில்லி போலீசார் ஹசாரேயுடன் பேச்சு நடத்தி முடிவு செய்வர் - உள்துறை செயலர் பிள்ளை.* ஹசாரேயுடன் டில்லி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், உண்ணாவிரத போராட்டத்தை மூன்று வாரங்கள் நடத்துவதற்கு அனுமதிவழங்க முன்வந்துள்ளனர்.* உண்ணாவிரதம் போராட்டம் ராம்லீலா மைதானத்தில் நடத்துவதற்கு ஹசாரே குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த மைதானம் 25 ஆயிரம் பேர் வரை அமரும் வசதி கொண்டது..* அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக, நேற்று இரவு மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.*பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டியதை தொடர்ந்து, ஹசாரே திகார் சிறையிலிருந்து இன்று வெளியே வருவார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com