புதன், 17 ஆகஸ்ட், 2011

17.08.2011இன் சிறப்பு செய்திகள்

அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன்.

நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப் பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர்.


இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.



லிபிய அதிபர் கடாபியை நெருங்கி கொண்டிர்ருக்கிறோம் போர் வெற்றியோடு ரமழான் கொண்டாடுவோம்:போராளிகள்.

லிபிய அதிபர் கடாபி மற்றும் அவரது படைகளுக்கெதிரான யுத்தத்தில் முக்கியமான கட்டத்தினை அடைந்துள்ளதாக அந்நாட்டு போராளிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இம்மாத இறுதிக்குள் வெற்றியடைய முடியுமெனவும் ரமழானுடன் லிபியாவை மீட்ட வெற்றியையும் கொண்டாடுவோமெனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கும் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடாபியின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்துள்ளது. லிபிய தலைநகருக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஷாவியா பகுதியின் முழுக்கட்டுப்பாடும் தமக்கு கீழ் இருப்பதாகவும் இதனால் திரிபோலியை கூடிய விரைவில் கைப்பற்ற முடியுமெனவும் போராளிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை லிபிய அரச படைகள் கிளர்ச்சியாளர்களுக்கெதிரான போரில் முதற்தடவையாக ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ரஷ்ய மற்றும் வடகொரியாச்ச்வில் தயாரிக்கப்பட்ட 'ஸ்கட்' ஏவுகணைகள் 200 வரை கடாபி படையினரிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தினையும் பிரமாண்டத்தினையும் அவதானிக்கமுடியும்.இம்முறை அப்பிள் காட்டவுள்ள வித்தியாசம் அதன் தயாரிப்பில் அல்ல அப்பிளின் தலைமையகத்தில். அமெரிக்க கலிபோர்னியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அப்பிளின் மிகப் பிரமாண்டமான தலைமையகக் கட்டடமான அப்பிள் கெம்பஸ் 2 அனைவரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள பறக்கும் தட்டு வடிவிலான இக்கட்டிடத்தில் சுமார் 13,000 அப்பிள் ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர்.




2.8 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் முழுவதும் கண்ணாடி இழைகளைக் கொண்டு அமையவுள்ள இவ்வட்டவடிவ கட்டடத்தை 6000 மரங்கள் சூழ நடப்படவுள்ளன.மேலும் பல்வேறு வசதிகளுடன் அமையவுள்ள இக்கட்டடத்தின் மாதிரி உருவத்தினை நீங்களும்தான் பார்த்து ரசியுங்களேன்....

பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில்
தேவதாசி முறைமை

சமூக பாரம்பரிய முறைமைகள், சமய
வழக்காறுகள் ஆகியன தொன்று
தொட்டு நின்று நீடித்து நிலைத்து
வருகின்ற ஒரு நாடு இந்தியா
ஆகும். இங்கு மிகவும் பழைமையான
சமய நடைமுறைகளில் ஒன்றுதான
தேவதாசி முறைமை. தேவதாசி
என்பதற்கு கடவுளின் அடிமை என்று
அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர்
தெய்வத்த்துக்கு மணப்
பெண்ணாக தாரை வார்த்துக்
கொடுக்கப்படுகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் அமையப்
பெற்று உள்ளது தார்வாட் நகரம்.
இந்நகரத்தில் Saundatti என்று
ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா
என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய
கோவில் உள்ளது. இக்கோவிலில்
இன்றும் தேவதாசி முறை உயிரோடு
உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக
ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா
தெய்வத்துக்கு தாரை வார்த்துக்
கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள்
வேறு யாரையும் திருமணம்
செய்கின்றமை முடியாது.குடும்பத்துடன்
தொடர்பு வைத்து இருக்க முடியாது.
ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள் ,
நகரத்திலும் ஊரிலும் பணம், பிரதாபம்
ஆகியன உள்ள பெரிய மனிதர்கள்
போன்றோருக்கு இச்சிறுமிகள்
சேவையாற்றுதல் வேண்டும்.
பாலியல் திருப்தியை கொடுக்க
வேண்டும். இது தெய்வத்துக்கு
செய்கின்ற திருத்தொண்டாகவே
கொள்ளப்படுகின்றது. இத்தேவதாசிகள்
ஆலயமே கதி என்று வழ்நாள்
முழுவதும் இருக்க வேண்டியமைதான்.
தப்பிச் செல்ல முடியாது.
தப்பிச் செல்ல முயல்கின்றவர்களை
சமுதாயம் மன்னிக்காது, ஏற்றுக்
கொள்ளாது. தேவதாசி முறைமை
பெண்கள் மீதான சுரண்டலுடன்
சம்பந்தப்பட்டது. பொருளாதா
மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய
சிறுமிகள் விபச்சாரத்தில்
கடவுளின் பெயரால் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.
இச்சிறுமிகள் தலித் என்று சொல்லப்படுகின்ற
தீண்டத் தகாத சாதியைச் சேர்ந்தவர்கள்
ஆவர். தேவதாசி முறைமை பகிரங்க
விபச்சாரம் ஆகும்.
அறியாமை மற்றும் வறுமையில்
வாடுகின்ற பெற்றோர் நல்லது நடக்கும்
என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளை
கடவுளுக்கு தாரை வார்க்கின்றார்கள்.
தேவதாசிகள் கன்னித் தன்மையை
வயதான ஒருவருக்கு அர்ப்பணிக்க
நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தேவதாசியாக
செயல்படுகின்றமை மூலம்
பெண்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற
பணம் பெற்றோரைச் சென்றடைகின்றது.
ஒரு விதத்தில் கூட்டிக்
கொடுப்பவர்களாக பெற்றோர் செயல்படுகின்றனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள்
ஆணைக் குழுவின் அறிக்கையின்படி
தேவதாசி முறைமை பணம்
சம்பாதிக்கின்றமைக்கான பாலியல்
சுரண்டல் நடவடிக்கைகளில் ஒன்றாக
அண்மைய காலங்களில் நவீனத்துவம்
அடைந்து உள்ளது. தேவதாசிப்
பெண்கள் நகரங்கள், தூர இடங்கள்
ஆகியவற்றுக்கு சென்று விபச்சாரத்தில்
ஈடுபடுகின்றார்கள். இங்கு 45.9 சதவீதமான
தேவதாசிப் பெண்கள் விபச்சாரிகள் ஆவர்.
தேவதாசிகள் பிச்சை எடுக்கின்றமையையும்
காண முடிகின்றது.

தென்னிந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திர
பிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா
ஆகிய மாநிலங்களில் தேவதாசி
முறைமையை காண முடிகின்றது.
1934 ஆம் ஆண்டு தேவதாசிகள்
பாதுகாப்புச் சட்டம் கொண்டு
வரப்பட்டது. இது தேவதாசி முறைமையை
தடை செய்கின்றது. இச்சட்டத்துக்கு
1980 களில் மீண்டும் உயிர் ஊட்டப்பட்டது.
ஆனால் இச்சட்டம் ஒவ்வொரு
நாளுமே மீறப்படுகின்றது.
தேவதாசியாக சிறுமியை
ஆக்குகின்றமைக்கு துணை புரிபவர்கள்
அல்லது தேவதாசியாக சிறுமியை
ஆக்குகின்ற சடங்குக்கு செல்பவர்கள்
இரு வருட சிறைத் தண்டனையுடன்
அதிக பட்சம் இந்திய
ரூபாய் 2000 அபராதமாக
விதிக்கப்படுகின்றமைக்கு உரித்து
உடையவர்கள். சிறுமியை தேவதாசி
ஆக்குகின்றனர் என்று குற்றவாளிகளாக
காணப்படுகின்ற பெற்றோர் மற்றும்
உறவினர்களுக்கு அதிக பட்சம்
5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com