ஞாயிற்றுக்கிழமை காலை நான்குமாதக் கர்ப்பிணிப் பெண் Coulommiers அருகில் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். தொடருந்து பரிஸை நோக்கிக் காலை 8மணிக்குப்
பயணித்துக் கொண்டிருந்தது. அவர் பயணம் செய்து கொண்டிருந்தவண்டியினுள் தனியாகவே
பயணம் செய்து கொண்டிருந்தார்.
அந்த வண்டியினுள் வந்த ஒரு 18 வயது வாலிபன் அந்தப் பெண்ணை அணுகியுள்ளான்.அந்தக்
கர்ப்பிணிப் பெண்ணை நோக்கிக் கத்தியைக் காட்டிய இளைஞன் அவரைப்பாலியல் வல்லுறவு
கொண்டுள்ளான். வல்லுறவு கொண்டுவிட்டு அடுத்த நிறுத்தத்தில்இறங்கி ஓடிவிட்டான்.
பரிஸ் வந்தடைந்த அந்தப் பெண் காவற்துறையினரிடம்முறைப்பாடு செய்தார்.
பெண்ணின் முறைப்பாட்டைத் தொடர்ந்து தொடருந்து நிலையத்திலிருந்த கண்காணிப்பு
ஒளிக்கருவிகளின் பதிவுகளைப் புலனாய்வு செய்த காவற்துறையினர் குற்றவாளியைஅடையாளம்
கண்டனர். அதனைத் தொடர்ந்து தேடுதலில் இறங்கிய காவற்துறையினர் Vaires-sur-Marne (Seine-et-Marne) எனும் இடத்தில் வைத்து இன்று செவ்வாய்அதிகாலை பாலியல் வல்லுறவு கொண்ட
குற்றவாளியைக் கைது செய்தனர்.Chellesகாவல் நிலையத்தில் வைத்துக் குற்றவாளியை
விசாரணை செய்து வருகின்றனர்.
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகப் பின்பற்றுவதில் பொதுமக்களிடையே நடைமுறை இடர்ப்பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. 2008-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதன் மூலம், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் காலத்தால் முற்பட்ட வழக்கத்தை மீட்டெடுக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்தில் இந்திய குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் பேசியது:
பகுத்தறிவாளர்களுக்கு என்று ஒரு நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அந்த நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. அக்டோபர் 1-ல் புத்தாண்டா, ஜனவரி 1-ல் புத்தாண்டா என ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதிலும் நீண்டகாலமாக சர்ச்சை இருந்து வருகிறது. பலநூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை வழக்கத்தைக் காப்பாற்றும் வகையில் மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்ற சட்டத்தைப் பாராட்டி வரவேற்கிறேன் என்றார்.
பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ. சௌந்திரராஜன் பேசும்போது, இந்தச் சட்ட மசோதாவை பேரவை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தச் சட்ட மசோதா நிறைவேறியது.
இன்று கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக், மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று கனடா நேரப்படி 1.45 PM மணியளவில் நிகழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பயத்தின் காரணமாக படிகளில் வீழ்ந்து சிறு காயங்களுக்குள்ளகியுள்ளனர்
தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளும் இதில் அடங்கும்.சில கடைகளில் அலுமாரிகள் கண்ணாடிகள் உடைந்ததுடன் கட்டிடங்களின் சுவர்கள் வெடிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக