விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிர். 110 ஆண்டுகளாக எரியும் குண்டு பல்பு.
அமெரிக்காவில் கடந்த 110 ஆண்டுகளாக பீஸ் போகாமல் எரிந்து வரும் குண்டு பல்பு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லிவர்மோர் நகரில் தீயணைப்பு அலுவலகம் உள்ளது.
இங்கு 1901-ம் ஆண்டு 60 வாட் குண்டு பல்பு பொருத்தப்பட்டது. அதற்கு பிறகு, கட்டிட பராமரிப்பு வேலைகள், பெயின்ட் அடிக்கும் வேலைகள் பல முறை நடந்த போதும், இந்த பல்பு அகற்றப்படவில்லை. தற்போதும் எரிந்து வருகிறது.110 ஆண்டுகளாக பீஸ் போகாமல் எரிவதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
1903-ம் ஆண்டில் சில காலமும் 1937-ல் ஒரு வாரமும் தொடர்ந்து 1976-ம் ஆண்டு வரையில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட நேரங்களில் மட்டும் இந்த பல்பு எரியவில்லை. மற்றபடி 110 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.
நூறாண்டு கடந்த மின்விளக்குகளை பாதுகாக்கும் கமிட்டி ஒன்று லிவர்மோர் நகரில் செயல்படுகிறது. அதன் தலைவர் லின் ஓவன்ஸ் கூறுகையில், ‘‘குண்டு பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, அதிக வெப்பம் தாங்க முடியாமல் சிறிது காலத்தில் வலுவிழந்து உடைந்துவிடும். இதைத்தான் பீஸ் போகிறது என்கிறோம். இந்த பல்பு இத்தனை காலம் எப்படி பீஸ் போகாமல் எரிகிறது என்பது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது’’ என்றார்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதலில் சென்னை நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை பின்னர் பெங்களூர் தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பது நியதி. எனவே ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை.
கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள இந்த மனு, பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை மேலும் சில மாதங்கள் தாமதப்படுத்தும் செயலாகவே தெரிகிறது. இதைத் தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதனால் அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும், அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது. அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதை வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாதால் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்
சுரங்கத் தொழிலில் ராஜாவாக கொடிகட்டிப் பறந்த, ரெட்டி சகோதரர்களில் ஒருவரான, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, மற்றும் ஓபலாபுரம் சுரங்க நிறுவன மேனேஜிங் டைரக்டர் சீனிவாச ரெட்டி ஆகியோரது வீடுகளில் , நேற்று அதிகாலை, சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்திய, "ருக்மினி' ஹெலிகாப்டர், நான்கரை கோடி ரொக்கப் பணம், 30 கிலோ தங்கத்தையும் கைப்பற்றினர். பின், இருவரையும் உடனடியாக சி.பி.ஐ., கைது செய்தது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் ஓபலாபுரத்தில், சுரங்க நிறுவனங்கள் வைத்து நடத்தி வருபவர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. இதில், ஜனார்த்தன ரெட்டிக்கு அதிகப் பங்கு உள்ளது.இவர்கள், சட்டவிரோதமாக சுரங்க நிறுவனங்கள் நடத்துவதாகவும், அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு சுரங்க கனிமவளங்களை அனுப்புவதாகவும், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி, ஜனார்த்தன ரெட்டியுடன் நெருக்கமாக இருந்ததால், இவர்களது நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்த பின், ரோசய்யா முதல்வரானார். அவர், இந்த புகார்களை விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கினார்.சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தொடந்த வழக்கின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட், "மத்திய அதிகாரக் குழு' (சி.இ.சி.,)யை அமைத்தது. இக்குழு விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையில், ஓபலாபுரம் சுரங்க நிறுவனம், சட்டவிரோதமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஆந்திர சி.பி.ஐ., கோர்ட், ஜனார்த்தன ரெட்டி, ஓபலாபுரம் சுரங்க நிறுவன மேனேஜிங் டைரக்டர் சீனிவாச ரெட்டி ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, சி.பி.ஐ., டி.ஐ.ஜி., வெங்கட் நாராயணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழு, அதிரடியாக ஒரே நேரத்தில் பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டி வீடு, சீனிவாச ரெட்டி வீடு, பெங்களூரில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின், "பாரிஜாதா' வீடு ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனைநடந்து கொண்டிருந்தபோதே, பெல்லாரியிலிருந்த ஜனார்த்தன ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்தும், "ருக்மினி' என்ற ஹெலிகாப்டர், மொபைல் போன் ஆகியவற்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர்.பின், அவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை செய்ததில், நான்கரை கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், 30 கிலோ தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், பெங்களூரு வீட்டில் நடந்த சோதனையில், ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்தி வந்த லேப்-டாப், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். வீட்டிலுள்ள ரகசிய அறை ஒன்று வித்தியாசமாகக் காணப்பட்டது. இதேபோன்று, ஐதராபாத்திலுள்ள வீடுகள், கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்குச் சொந்தமான வீடுகளிலும் சோதனையிட்டனர். பகல் முழுவதும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், ஐதராபாத் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு, கார் மூலம் மதியம் 1.30 மணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இருவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பெல்லாரியில், ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பெல்லாரியில், பதட்டம் நிலவுகிறது.
சுரங்க ஊழல் குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தாக்கல் செய்த அறிக்கையில், கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது.பெல்லாரியிலுள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீடு, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும் கூட, வெளியில் தெரியாத அளவுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்தி வரும் மொபைல் எண், யாருக்கும் தெரியாத அளவில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மொபைல் எண்ணையும் மாற்றி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
14 நாள் காவல்: கைது செய்யப்பட்ட இருவரும், ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று மாலை 4.20 மணிக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரிடமும் மேலும் விசாரணை நடத்த, 14 நாள் அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ., தரப்பில் கோரினர்.ஜனார்த்தன ரெட்டி தரப்பில், அவர் மீது எந்த தவறு இல்லை. இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் சூழ்நிலையில், அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும், என்று கேட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜனார்த்தன ரெட்டி, சீனிவாச ரெட்டியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின், விசாரணையை 7ம் தேதி க்கு (நாளை) ஒத்தி வைத்து, நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, ஜனார்த்தன ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோர், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஜென்செல்குட்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும், ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பயன்படுத்தி வந்த இரண்டு சொகுசு கார்கள், பஸ் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சீனிவாச ரெட்டியும், இரண்டாவது குற்றவாளியாக ஜனார்த்தன ரெட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் இதுதான் கதி: மொய்லி:
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி குறிப்பிடுகையில், "தேசிய சொத்தான இரும்புத் தாதுவை, ரெட்டி முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். மாநில அரசின் தாமதத்தால் தான் ரெட்டி சகோதரர்கள் மீது தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா அரசு, நிர்வாகத்தை மோசமாக பயன்படுத்தியுள்ளது. அவரும், அவரது அமைச்சர்களும் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தினர். உயர் பதவியில் உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால், ஜனார்த்தன ரெட்டிக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும், என்பது பாடமாக அமைந்துள்ளது. எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த பதவியை வகிப்பவர்களாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி குறிப்பிடுகையில், "பெல்லாரி சகோதரர்களை பற்றிய சங்கதி எல்லாருக்கும் தெரிந்தது தான். சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக பா.ஜ., கூறுவதில் உண்மையில்லை. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தால் பா.ஜ., இந்த கருத்தை கூறும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். சி.பி.ஐ.,யை பற்றி எந்த சான்றிதழும் தேவையில்லை' என்றார்.
சட்டம் கடமையை செய்கிறது- காங்.,; கட்சிக்கு சம்பந்தம் இல்லை- பா.ஜ., :
மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, இது குறித்து குறிப்பிடுகையில், "சி.பி.ஐ., விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. ஜனார்த்தன ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி கைது விஷயத்தில், சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. சி.பி.ஐ., தற்போது விசாரணை நடத்தி வருகிறது. நாம் சி.பி.ஐ., மீது நம்பிக்கை வைத்துத் தான் ஆக வேண்டும்' என்றார்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான தனஞ்ஜெயகுமார் குறிப்பிடுகையில், "ரெட்டி சகோதரர்கள் சுரங்கத் தொழிலில் விதிமுறையை மீறவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பார்கள். சி.பி.ஐ., சிலர் மீது சந்தேகப்பட்டால், அவர்களைக் கைது செய்து விசாரிப்பது நடைமுறையில் உள்ளது.ஆந்திர ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சி.பி.ஐ., இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது. ரெட்டி சகோதரர்கள் நடத்திய வர்த்தகத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என்றார்.
எந்த தொடர்பும் இல்லை: சுஷ்மா: லோக்சபாவில், சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், "என் மீது எந்தவிதமான ஊழல் புகார் இருந்தாலும் அதை எதிர்க்கட்சித் தலைவர் விசாரிக்கலாம்' என்றார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். "அவர் நடத்திய சுரங்கத் தொழிலில், பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜுக்கும் தொடர்பு உண்டு' என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கோபமடைந்த சுஷ்மா சுவராஜ் குறிப்பிடுகையில், "ரெட்டி சகோதரர்கள் நடத்தும் வர்த்தகத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக எந்த விசாரணையை வேண்டுமானாலும் சந்திக்க தயார். பிரதமர் மன்மோகனே நேரடியாக விசாரித்தாலும் சரி. இந்த குற்றச்சாட்டை கூறிய திக்விஜய் சிங் தலைமையிலான குழுவே விசாரித்தாலும் சரி, அதை நான் ஏற்க தயார். நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கவும் தயார்.எனவே, திக்விஜய் சிங் தலைமையிலான விசாரணை குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்து, என்னை விசாரிக்க செய்ய வேண்டும். அப்போது தான், திக்விஜய் சிங் திருப்தியடைவார். ரெட்டி சகோதரர்களுடன் அப்போதும் சரி, இப்போதும் சரி எந்த வர்த்தக தொடர்பும் இருந்ததே கிடையாது' என்றார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக