பெற்ற ஆண் குழந்தையை சாக்கடையில் போட்டுவிட்டு சென்ற பெற்றோர்:திருப்பூரில் சம்பவம்.
ஆண் சிசுவை, சாக்கடையில் வீசிச்சென்ற இருவரை திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பண்ணாரியம்மன் நகரில் நேற்று நடந்த சென்ற சிலர், அதிகளவு ரத்தம் இருந்ததை பார்த்து, திடுக்கிட்டனர் ரத்த துளிகள் ரோட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடை வரை இருந்தன.
அங்கு, எட்டிப்பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த, அழகான தும்பை பூ போல் இருந்த ஆண் குழந்தை, சாக்கடைக்குள் இறந்த நிலையில் கிடந்தது.
தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தை சாக்கடையில் கிடந்ததை கண்ட பலரும் வேதனைப்பட்டனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர். குழந்தையை பார்க்கும் தைரியமான மனம் கூட இல்லாமல் பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், "நேற்று மதியம் 2.30 மணிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பைக்கில் வந்தனர். ரோடு சந்திப்பில் நின்றிருந்தனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாக உள்ளதால், ஐந்து நிமிடம் கூட இருவரும் நிற்கவில்லை.
அப்போதே இருவரும் பைக்கில் ஏறி வேகமாக சென்று விட்டனர். அவர்கள் தான் குழந்தையை வீசியிருக்க வேண்டும்' என்றனர். "குழந்தை உயிருடன் சாக்கடையில் வீசப்பட்டதாகவும்' சிலர் கூறினர். "பிரசவமே ரோட்டில், சாக்கடையோரத்தில் தான் நடந்தது' என்றும் சிலர் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பு, திருமணமாகாமல் தாய்மையானது, இளம் வயது காதல் என ஏதோ ஒரு பிரச்னையால், பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசியிருக்கிறார், அந்தப்பெண்.
ரூரல் போலீசார், சாக்கடையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கல் மனம் படைந்த பெண் மற்றும் உடன் வந்த ஆண் யார், ஏன் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் இதே பகுதியிலுள்ள குப்பை தொட்டியில், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சசி மாவட்டம் துவரங்குறிச்சி அருககே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் மோதிக் கொண்டது:3 குழந்தைகள் உள்ளிட்ட 14பேர் பலி.
திருச்சசி மாவட்டம் துவரங்குறிச்சி அருககே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 14பேர் பலியானார்கள்.
மதுரை-சென்னை சாலையில்துவரங்குறிச்சி- கோவில்பட்டி அருகே ஆவரப்பட்டியில் உள்ள பாலத்தில்சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து இன்று காலை வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவில்பட்டியில் இருந்துமணப்பாறைக்கு அரசு டவுன் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இதில் ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள்நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர்பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானின் இரு தீவுகளை,"டலாஸ்' சூறாவளி தாக்கியது:18 பேர் பலி.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். 43 பேர் காணாமல் போயினர். இன்று ஜப்பானைக் கடந்து கிழக்கு ஜப்பான் கடலை நோக்கி, "டலாஸ்' செல்லும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் கன மழையும் அதனால் நிலச்சரிவும் ஏற்படலாம் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆண் சிசுவை, சாக்கடையில் வீசிச்சென்ற இருவரை திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பண்ணாரியம்மன் நகரில் நேற்று நடந்த சென்ற சிலர், அதிகளவு ரத்தம் இருந்ததை பார்த்து, திடுக்கிட்டனர் ரத்த துளிகள் ரோட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடை வரை இருந்தன.
அங்கு, எட்டிப்பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த, அழகான தும்பை பூ போல் இருந்த ஆண் குழந்தை, சாக்கடைக்குள் இறந்த நிலையில் கிடந்தது.
தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தை சாக்கடையில் கிடந்ததை கண்ட பலரும் வேதனைப்பட்டனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர். குழந்தையை பார்க்கும் தைரியமான மனம் கூட இல்லாமல் பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், "நேற்று மதியம் 2.30 மணிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பைக்கில் வந்தனர். ரோடு சந்திப்பில் நின்றிருந்தனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாக உள்ளதால், ஐந்து நிமிடம் கூட இருவரும் நிற்கவில்லை.அப்போதே இருவரும் பைக்கில் ஏறி வேகமாக சென்று விட்டனர். அவர்கள் தான் குழந்தையை வீசியிருக்க வேண்டும்' என்றனர். "குழந்தை உயிருடன் சாக்கடையில் வீசப்பட்டதாகவும்' சிலர் கூறினர். "பிரசவமே ரோட்டில், சாக்கடையோரத்தில் தான் நடந்தது' என்றும் சிலர் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பு, திருமணமாகாமல் தாய்மையானது, இளம் வயது காதல் என ஏதோ ஒரு பிரச்னையால், பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசியிருக்கிறார், அந்தப்பெண்.
ரூரல் போலீசார், சாக்கடையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கல் மனம் படைந்த பெண் மற்றும் உடன் வந்த ஆண் யார், ஏன் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் இதே பகுதியிலுள்ள குப்பை தொட்டியில், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சசி மாவட்டம் துவரங்குறிச்சி அருககே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் மோதிக் கொண்டது:3 குழந்தைகள் உள்ளிட்ட 14பேர் பலி.
திருச்சசி மாவட்டம் துவரங்குறிச்சி அருககே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 14பேர் பலியானார்கள்.
மதுரை-சென்னை சாலையில்துவரங்குறிச்சி- கோவில்பட்டி அருகே ஆவரப்பட்டியில் உள்ள பாலத்தில்சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து இன்று காலை வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவில்பட்டியில் இருந்துமணப்பாறைக்கு அரசு டவுன் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இதில் ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள்நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர்பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானின் இரு தீவுகளை,"டலாஸ்' சூறாவளி தாக்கியது:18 பேர் பலி.

ஜப்பானின் இரு தீவுகளை,"டலாஸ்' சூறாவளி தாக்கியதில், 18 பேர் பலியாகினர். இரு மாகாணங்களில் பெய்த கன மழையால், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஜப்பானின் ஷிகோகு தீவு மற்றும் பிரதான ஹோன்ஷூ தீவு ஆகியவற்றை நேற்று,"டலாஸ்' சூறாவளி தாக்கியது. இதில், வகாயாமா மற்றும் நரா என்ற இரு மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டதால், ஐந்து லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். வகாயாமா மற்றும் நரா மாகாணங்களில், பல இடங்களில், கன மழை காரணமாக நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன.
சீனாவில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் உள்ள ஒரு மான் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக தினமும் போத்தல் போத்தலாக பீர் குடித்து காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
இந்த விடுதியில் பணியாற்றும் ஒரு நபர் ஒருநாள் தண்ணீருக்குப் பதிலாக மானுக்கு பீர் குடுத்திருக்கிறார் அதுவே இப்போது விபரீதமாக மாறிவிட்டது.
அந்த மான் தினந்தோறும் குறைந்தது இரண்டு போத்தல் பீர்ரை குடிக்கிறது. அதுதவிர தினமும் வைன்னும் குடிக்கிறதாம். ஒரு போத்தல் பீரை ஒரு இழுவையிலேயே அது குடித்து முடித்து விடுகிறதாம் .
இதனால் இப்போது அந்த பணியாளரின் முழு ஊதியமும் மானுக்கு பீரும் வைன்னும் வாங்கிக் கொடுக்கவே போய்விடுகிறதாம்.
அந்த மான் பீர் குடித்துவிட்டு போடும் கூத்தை பார்க்கவே தினமும் அங்கு பலர் வருகை தர தொடங்கியுள்ளனராம்.

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அதிமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார். இதற்கு திமுகவினர் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்தக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையை தொடர்ந்து புறக்கணித்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் முடிவை கைவிட்டு இன்று அவைக்குத் திரும்பினர்.
ஜெயலலிதாவுக்கு வணக்கம் சொன்ன துரைமுருகன்:
தி.மு.க. சட்டமன்றத் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி நேரம் தொடங்கிய சிறிது நேரத்துக்கு பின் சபைக்கு வந்தார். முதலில் சபாநாயகருக்கும், பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தார். ஜெயலலிதாவும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் கூறுகையில்,
சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள கால்வாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 1967ல் இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. அப்போது இந்த இடத்தை கேட்டு மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
60க்கு 13 அளவுள்ள அந்த கால்வாய் இடம் வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில் மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றி அந்த இடத்தை கொடுத்துள்ளது. இதற்காக ரூ.3,250 அரசுக்கு செலுத்தியுள்ளார்.
அப்போது ஒரு நிபந்தனையுடன் அந்த இடம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. கால்வாயை சுத்தம் செய்ய மாநகராட்சி ஊழியர்கள் வருவார்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இடம் ஒதுக்கப்பட்டது.
அதன் பிறகு அந்த இடத்தை ஒதுக்கியது தவறு என்று தெரிந்ததும் கருணாநிதிக்கு கடிதம் எழுதி அந்தப் பணத்தை அரசு திருப்பி கொடுத்து விட்டது. ஆனால், அதன் பிறகு அந்த இடத்தை கருணாநிதி இன்னும் திருப்பி தரவில்லை.
வீட்டின் பின்புறம் நிரந்தரமாக ஷெட் போட்டு வைத்துள்ளார். அதில் தற்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசார் தான் உள்ளனர். வீட்டின் பின்புறமாக வெளியே போகவும் அந்த இடத்தை கருணாநிதி பயன்படுத்தி வருகிறார். கோபாலபுரம் பகுதி பள்ளமான இடமாகும். தண்ணீர் அடிக்கடி தேங்குவதால் கால்வாயை தூர் வாரினால்தான் தண்ணீர் செல்லும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கருணாநிதி அதைப்பற்றி கலைப்படவில்லை.
இதே போல் சென்னை அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்துக்கு முன் உள்ள மாநகராட்சியின் இடம் பூங்காவுக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அங்கு பொதுமக்கள் பயன்படுத்த பூங்கா இல்லை. என்னைப் போன்றவர்கள் செல்வதற்கும் அங்கு தனியாக வாசல் இல்லை. கருணாநிதியே இந்த இடத்தை அபகரித்துள்ளதால் கட்சியில் உள்ள யாரையும் அவரால் கேள்வி கேட்க முடியவில்லை.
நில அபகரிப்பில் திமுகவினர் ஜெயிலுக்கு சென்றுள்ளனர். என் மீதும் என் மனைவி, மகன் மீதும் தி.மு.க. ஆட்சியில் திருட்டு வழக்கு போட்டனர். அதை கோர்ட்டில் சந்தித்து வெளியே வந்துள்ளோம்.
திமுகவினருக்குள்ள சின்ன புத்தி, எங்களுக்கு கிடையாது. இதேபோல் சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி, சித்திர ராமமூர்த்தி ஆகியோர் தங்களது இடங்களை நில உச்சவரம்பு சட்டப்படி அரசிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால். அந்த இடத்துக்கு போலி பட்டா வாங்கி முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் பெயரில் அபகரித்துள்ளார்.
அண்ணா நகரில் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் 1.32 ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.100 கோடி. இந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால், இதற்கு மேல் பேச விரும்பவில்லை.
அறிவாலயத்தில் 11,000 சதுர அடியில் வீடு இருப்பதாக கணக்கில் காட்டி உள்ளனர். அங்கு எங்கே வீடு உள்ளது?. திமுகவே கொள்ளைக் கூட்டமாக உள்ளது. பஞ்சபூதமும் கடந்த ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டது என்றார்.
அப்போது திமுக சட்டமன்றத் துணைத் தலைவர் துரைமுருகன் பேச எழுந்தார். ஆனால், அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் வாய்ப்பு தரவில்லை.
சபாநாயகர் ஜெயக்குமார்: வெற்றிவேல் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்து பேசுகிறார். ஆனால் உறுப்பினர் துரைமுருகன் எந்த விதியின் கீழ் பேச முயல்கிறீர்கள். நீங்கள் நோட்டீசு எதுவும் தரவில்லையே? என்றார்.
இதையடுத்து துரைமுருகன் மீண்டும் பேச முயன்று சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
துரைமுருகனுக்கு எதிராக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அப்போது திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஏதோ கூற, அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு திமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கூச்சலிடவே அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது சபாநாயகர் ஜெயக்குமார் பேசுகையில், வெற்றிவேல் தப்பாக என்ன பேசிவிட்டார். அவர் பேசிய பிறகு உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அமைதியாக இருங்கள். சபைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் உங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என திமுகவினரை எச்சரித்தார்.
இந் நிலையில் மன்னார்குடி தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தனது செல்போனால் அவை நடவடிக்கைகளை படம் எடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவைக் காவலர்களால் அந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இது அவையை மீறிய செயல் என்பதால் செல்போனில் என்ன படம் எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய அதை அவையின் உரிமைக் குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து தி.மு.கவினர் தங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை எனக்கூறி துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.கவினர் வெளியேறிய பின் அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் தொடர்ந்து பேசுகையில், கொளத்தூர் ஜவகர் நகரில் பள்ளிக்கூட சாரணியர் இடத்தை ஆக்கிரமித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகம் கட்டி உள்ளார். எனவே இவர்கள் செய்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அரசு மீட்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், சென்னை மாநகராட்சியில் பழைய செட்டில்மெண்ட் பகுதிகளான சைதாப்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர் பகுதிகளில் குப்பை கழிவுகளை அகற்ற அதற்காக நியமிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சென்று பணியாற்ற தனி “சந்துகள்” பராமரிக்கப்பட்டன. காலப் போக்கில் கழிவு நீரை அகற்றும் பணிகள் இயந்திரங்களாலும் பாதாள சாக்கடை மூலமாகவும் அகற்றும் வகையில் நவீனமயமாக்கப்பட்டதால் இந்த சந்துகள் பயன்பாடு இன்றி சென்னையில் பல இடங்களில் உள்ளன.
பயன்பாடற்ற இந்த துப்புரவு சந்துகளை சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதுவரை எந்த ஆய்வில் கோபாலபுரம் 4-வது தெரு, 5-வது தெருவுக்கு இடைப்பட்ட பகுதியில் 653 அடி நீளமும், 12 அடி அகலமும் உள்ள சந்தில் 4 ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதில் ஒரு ஆக்கிரமிப்பு சந்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டின் பின்புறம் 780 சதுர அடி நிலம் பாதுகாவலர் நிழல் கூடம் மற்றும் கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது.
1978ல் கருணாநிதி அந்த இடத்தை தனக்கு மறு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்திருத்தார். ஆனால் சென்னை மாநகராட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே உறுப்பினர் வெற்றிவேல் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கழிவு நீர் குழாயை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சிக்கு எடுத்துக் கொள்ள கலெக்டரை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் 30-5-2003ல் நிறைவேற்றப்பட்டது. இதில் இறுதி நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த நிலம் கருணாநிதியின் பயன்பாட்டிலேயே இன்னும் இருந்து வருகிறது. எனவே இதுவரை துப்புரவு சந்துகளில் கண்டுபிடித்த ஆக்கிரமிப்புகளும், இனிமேல் கண்டுபிடிக்கும் ஆக்கிரமிப்புகள் அனைத்து மீதும் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக, நாளை வங்கதேசம் செல்கிறார். அவர் அங்கு, இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது, இருநாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இந்த பயணத்தின் போது, வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களையும் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்து இருந்தார். இதையேற்று பிரதமருடன் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்வதாக, முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அவர் செல்லவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மம்தா பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பயணத்தின் போது, டீஸ்டா ஆற்று நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது குறித்து, ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த டீஸ்டா நீர் திட்டம் குறித்து, மம்தா அதிருப்தியடைந்துள்ளதால், அவர் வங்கசேதம் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
சிலி நாட்டு ராணுவ விமானம் பசுபிக் பெருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேரும் பலியாகியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை தரையிறங்குவதில் தோல்வியடைந்து பறந்து கொண்டிருந்த இந்த விமானம், ஜுவான் ஃபெர்னாண்டஸ் என்ற தீவிற்கு அருகே பசுபிக் பெருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் பயணித்த 21 பேரும் உயிரிழந்திருப்பதாகவும் சிலி அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை 2 ஆண்களுடைய சடலும், 2 பெண்களுடைய சடலமும் கிடைத்துள்ளதாக சிலி நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட, சிவகாசி அருகே உள்ள எஸ்.என்.புரத்தைச் சேர்ந்த மாணவன் கோடீஸ்வரனை காவல்துறை மீட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவன் கோடீஸ்வரன் வீடு திரும்பாததையடுத்து, அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு எரிச்சநத்தத்தில் இருப்பதாக மாணவன் கோடீஸ்வரன் ஃபோன் செய்ததையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அவனை மீட்டு வந்தனர்.
அதனையடுத்து, மாணவன் கோடீஸ்வரனிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில், பள்ளிக்குச் செல்ல பயந்து தென்காசிக்குச் சென்று ஒரு ஹோட்டலில் வேலை செய்ததாகவும், கடத்தப்பட்டதாக வந்த செய்தியையடுத்து அங்கிருந்த வெளியேறி இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும், மாணவன் கோடீஸ்வரன் இதுபோன்று அடிக்கடி வீட்டை விட்டுப் போயுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவனைக் கடத்தியதாகக் கூறி ரூ.25 லட்சம் கேட்டு வந்த தொலைபேசி அழைப்பு யாருடையது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்ரீராமுலு. ரெட்டி சகோதரர்களை போல இவரும் சுரங்க தொழில் அதிபராக உள்ளார். முறைகேடாக சுரங்கத்தொழில் நடத்தியதாக, ரெட்டி சகோதரர்களுடன் இவருடைய பெயரையும் லோக்ஆயுக்தா குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, முதல்வர் சதானந்த கவுடா அமைச்சரவையில் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே இவர், தன்னுடைய பெல்லாரி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீராமுலு குறிப்பிடுகையில், ""முறைகேடாக சுரங்கத்தொழில் நடத்தியதாக, லோக்ஆயுக்தா என் மீது குற்றம்சாட்டியுள்ளது. இந்த அறிக்கையால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
என்னுடைய ராஜினாமாவால் ஆளும் பா.ஜ., கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பா.ஜ.,வின் ஐந்து ஆண்டு கால ஆட்சியை சதானந்த கவுடா நிறைவு செய்வார்,'' என்றார்.
"நாடு முழுவதும், 37 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், மொபைல் போன் இணைப்பு வசதி இல்லாமல் உள்ளன' என, மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா, கடந்த வாரம், பார்லிமென்டில் கூறியதாவது: தற்போது நம்நாட்டில், 5 லட்சத்து, 93 ஆயிரத்து, 731 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 37 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், இன்னும் மொபைல் போன் வசதியை பெறாமல் உள்ளன.
தற்போது நம்நாட்டில், 88 கோடி பேர், மொபைல் போன் வசதியை பெற்றுள்ளனர். யு.எஸ்.ஓ., நிதி மூலம், இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமங்களில், மொபைல்போன் கோபுரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, 27 மாநிலங்களில், 500 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, 7,289 மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், இனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் புதிதாக உருவாக்கப்பட மாட்டாது. கல்வித்துறை, வங்கிகள் என, பல துறைகளிலும் இன்டெர்நெட் சேவை விரிவடைந்து வருவதால், ஐந்து லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய்செலவில் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிலிந்த் தியோரா கூறினார்.
இது குறித்து, ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கன் கூறியதாவது: சர்வதேச வானியல் கூட்டு ஆய்வுத் திட்டம் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சியில், 60 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வானில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்யும் பயிற்சி, இவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இதில், 10 மாணவர்கள் சேர்ந்து, ஐந்து கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். டில்லி பாலபாரதி பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் வைபவ் சாப்ரா, ஷரன்ஜித் சிங் ஆகியோர், கிரகங்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். டில்லியின் ராஜிந்தர் நகரில் உள்ள பாலபாரதி பள்ளி மாணவியர் பிரக்யா மற்றும் அபராஜிதா ஆகியோர், மிகவும் அபூர்வமாகத் தென்படக் கூடிய, "ட்ரோஜான்' எனப்படும் கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகங்கள், வியாழன் கிரகத்திற்கு அருகே தென்படக்கூடியவை. குர்கானில் உள்ள ரையான் பள்ளியைச் சேர்ந்த சிந்தன், உமாங் பாட்டியா, கெமிக்கல் இன்ஜினியரிங் மையத்தைச் சேர்ந்த ட்ரூஷித் மக்வானா, நவல் கொர்ல்கர்,நேவி சில்ரன் பள்ளியைச் சேர்ந்த அக்ஷித் மாத்தூர், கார்த்திக் ரஞ்ஜன் ஆகியோர், சிறிய கிரகங்களைக் கண்டுபிடித்த மாணவர்கள் பட்டியலில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக