07.07.2011 இன்றைய செய்திகள்.

கனடாவின் இன்றைய செய்தி
கனடாவின் வான்கூவர் பிரதேசத்தின் நடந்து சென்ற ஒரு பாதசாரியை விரட்டிய 50 கிலோகிராம் எடை கொண்ட பெண் கரடி!


(வீடியோ இணைப்பு) |
| உலகத் தமிழர் பேரவை நடாத்திய கொள்கை விளக்க கூட்டத்துக்கு பிரித்தானிய பாராளுமனற உறுப்பினர்கள் வந்து கலந்துகொண்டனர். |
| மேலும் |

மத்திய கிழக்கு நாடுகளில் அடக்கு முறையை ஜேர்மனி அரசு ஆதரிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.சவுதி அரேபியாவுடன் முறைகேடான பீரங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது தொடர்பாக எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் இவ்வாறு குற்றம் சாட்டின.
சவுதி அரேபியாவுக்கு பீரங்கி அளித்தது குறித்து ஜேர்மனி அரசு ஒப்புதல் அளிக்கவோ அல்லது மறுக்கவோ இல்லை....
கனடாவின் இன்றைய செய்தி
கனடாவின் வான்கூவர் பிரதேசத்தின் நடந்து சென்ற ஒரு பாதசாரியை விரட்டிய 50 கிலோகிராம் எடை கொண்ட பெண் கரடி!

கனடாவின் வான்கூவர் பிரதேசத்தின் Mount Seymour என்ற இடத்தில் நடந்து சென்ற ஒரு பாதசாரியை விரட்டிய 50 கிலோகிராம் எடைகொண்ட பெண் கரடியை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். அதன் முன்பு யார் இருந்தாலும் கொல்லும்மூர்க்கத்தனம் வாய்ந்தவை... கரடிகளில் ஆண் பெண் வயது வேறுபாடின்றி

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதில் சீனாவிடம் இருந்து மட்டும், 759.8 மில்லியன் ஐ.அ.டொலர் (மொத்த கடனில் 55%) பெறுமதியான கடன் பெற்றுக் கொண்டதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டள்ள நடு ஆண்டு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மானிப்பாயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரின் வீட்டில் நாய் ஒன்றை வெட்டி எறிந்து நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள கட்டுடை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் ச.சிவகுமாரின் வீட்டில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலரால் நாய் ஒன்று வெட்டப்பட்டு உடல் வீட்டின் வாசற் கதவருகில் போடப்பட்டதுடன் நாயின் தலையை தடியில் செருகி...... மேலும்
இந்தியா.
சிறுவன் தில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது
சிறுவன் தில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று வக்கீல் புகழேந்தி, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் நேற்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், சிறுவன் சுடப்பட்டு 2 நாட்கள் ஆகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக