பிரான்சில் விரைவுத் தொடருந்தில் வாள் முனையில் பணயக்கைதியாக்கினான்:கைதி
பிரான்சில், நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 18h50 அளவில் La rochell ல் இருந்து Toulouse சென்று கொண்டிருந்த விரைவுத் தொடருந்தில் Orne நகரத்தின் பிரதம காவலதிகாரியின் மனைவி பயணம் செய்து கொண்டிருந்தார். Bordeaux நகரத்தை அண்மித்தபோது திடீரென அங்கு பயணித்த பயணி பெரும் ஜப்பானிய வாள் ஒன்றைக் கழுத்தில் வைத்து அவரைப் பணயக் கைதியாக்கினான். அத்தோடு மேலும் பலரையும் வாள் முனையில்.....மேலும்
காசாவுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற கனடா ஆர்வலர்கள் கிறீசில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் பயணத்தை தொடர முடியாமல் திரும்பினர்.
பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதியில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து.......மேலும்
இந்தியாவுக்கு அழுத்தங்களை கொடுக்கும் சனல் -4 காணொளிகள்.
பிரிட்டனின் சனல்4 காணொளியின் பயங்கரமான படுகொலைக் காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றமை இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் உறுதியாக செயற்படவேண்டுமென்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் செய்தி அலைவரிசைகளில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பிரபல்யமானவர்கள் இந்தக் காட்சிகள் தொடர்பாக தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.....மேலும் .
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது. இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படமானது உலகளாவியரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தபோது இலங்கையர் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள Palm Beach இற்கு அருகில் வைத்து இக்கைது இடம்பெற்றது. இவர்கள் நனைந்து.......மேலும்
தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம். சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும். இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர்.......மேலும்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக