புதன், 13 ஜூலை, 2011

13.07.2011 இன் செய்திகள்







மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு!



மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது...விரிவான படங்களுடன்உள்ளே

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: மீண்டும் 26/11?

இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு.....

மேலும் காணோளிகள் விரிவான செய்தி உள்ளே

உள்ளூராட்சி தேர்தலுக்காக இராணுவத்தை களமிறக்கிய மகிந்த!

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்காக வடக்கில் அரசாங்கத்துக்குச் சார்பாக படையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி கட்சியின் கிளிநொச்சிக்கான பிரதிநிதி விராஜு இக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதே வேளை நேற்று காலை இராணுவ வாகனத்தில் வந்தவர்கள் ஜே.வி.பி யின் அலுவலகத்தை படம் பிடித்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை இராணுவத்தினர் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இலங்கையின் வடக்கு பிரதேசத்துக்கு இன்று முதல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தடையின்றி செல்லமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்நாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்குக்கு செல்ல வெளிநாட்டு கடவுசீட்டை........மேலும்


ள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உருத்திரபுரம் கூழாவடி பிரதேசத்தில் மிகப்பெரியளவில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் கரைச்சிப் பிரதேச சபைக்குப் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கடந்தகாலத்தில் நடந்த கொடுமைகள் எதனையும் நாங்கள் மறக்கவில்லை. இந்த உருத்திரபுரம் மண்ணில் விமானக்குண்டு வீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் கொல்லப்பட்டுக் கிடந்த எம் சொந்தங்கள் கண்ணில் வந்து போகிறார்கள்.........................மேலும்.

(காணொளி உள்ளே)

நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த வீடியோ போலியானது:பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறினார்.


நித்யானந்தாவுடன் நான் இருப்பதாக வந்த வீடியோ போலியானது என்று பிரஸ் மீட் வைத்து புகார் கூறிய ரஞ்சிதா, நிருபர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறினார்.

நித்யானந்தா சாமியாருடன் ஆபாச படத்தில் தோன்றியதாக பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்டார் சிட்டி ஓட்டலில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ரஞ்சிதாவை பேட்டி காணவும், படம் எடுக்கவும் 300-க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் குவிந்துவிட்டனர். கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வந்திருந்தார் அவர்.


முதலில் சிரித்தபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தன் தரப்பு நியாயத்தை எடுத்து.......மேலும்

சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.,யை, சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்களுக்கு வைகோ நேற்று வழங்கினார்."சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.,யை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்களுக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ.....மேலும்

தமிழர்கள் மத்தியில் மட்டு​மே ஒலித்துக்​கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதர​வுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்​கத் தொடங்கி இருக்கிறது!
இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்​லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர்.

ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும்....மேலும்


எம்மையும் உங்களில் ஒருவராக பாருங்கள்!
எமது மக்களுக்கு உதவுங்கள்!(யாஹூ)yahoo ஊடாக .

இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நாங்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?

1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)

2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)

3. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பவும். (Send them home)

4. எனக்குத் தெரியாது. (I don't know)

போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கருத்துகணிப்பானது யாகூ இணையத்தில் ஒரு சிறிய பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தமிழர்களின்..


இன்றைய காணோளிகள்
சாவின் விளிம்பில் இருந்து தப்பி வந்த விமானி!
விமானத்தை கடலில் அவசரமாக தரையிறக்க முற்படும் போது ஏற்படும் அனர்த்தம்.

கார்பந்தயத்தில் வெடிச்சு சிதறும் கார்கள்!பாருங்கள் என்ன விவரீதம்?

மேலும் காணோளிகள் உள்ளே

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com