வெள்ளி, 15 ஜூலை, 2011

15.07.2011இன் செய்திகள்


நயினாதீவு ஸ்ரீநாகபூஷணியம்மன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணியம்மன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்டு வழிபட்டனர். இன்று முற்பகல் 9.30மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டபப் பூசையை அடுத்து நாகபூஷணியம்மன் தேரேறினார்

.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் திரண்டு வந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்........மேலும்


வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.


வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரஸ்தாப கைதிகள் நேற்றுடன் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோரை கைதுசெய்யக்கூடாது என்றும், அரசியல் கைதிகளின் வழக்குகளைத் தாமதமின்றி விசாரித்து அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் கோரி நான்கு தமிழ் அரசியல் கைதிகள் திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில்........மேலும்



முரளிதரனுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கு தமிழ் மக்களுக்கு இது தேவை தானா?

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்கின்றமைக்காகவே இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்து உள்ளார் உலகின் தலை சிறந்த சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

இலங்கைக் கிறிக்கெற்றை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரித்தானியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் தங்கி இருக்கின்றமையை.....மேலும்

குடும்பத்துடன் நாட்டில் குடியேற விரும்புபவர்களுக்கு இணையம் மூலம் ஆலோசனைகள்;பிரித்தானியா


,

குடும்பத்துடன் நாட்டில் குடியேற விரும்புபவர்களுக்கு இணையம் மூலம் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகின்ற 12 வார கால திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசு தொடங்கி உள்ளது. இத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நிறைவு பெறும்......மேலும்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சந்தைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சந்தைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் முற்பகல் 10 மணியளவில் அனிஞ்சியன் குளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி பொருட்களை வாங்குவதற்காக மல்லாவிச்.....மேலும்.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com