செவ்வாய், 19 ஜூலை, 2011

19.07.2011 இன் முன்னணி செய்திகள்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக்தியை அணு அளவாவது அசைக்க முடியாது.விக்கிரமபாகு!

அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசு எந்தவிதமான யுக்திகளைக் கையாண்டாலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக்தியை அணு அளவாவது அசைக்க முடியாது. நீதியானதும், சுதந்திரமானது மான முறையில் இம்முறை தேர்தல் நடைபெறுமானால் அதிலும் கூட்டமைப்புக்கே வெற்றி. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தமிழ் மக்கள் எப்பொழுதும்.......மேலும்.

இனப்படுகொலையை ஏற்படுத்திய நாட்டிலிருந்து தமிழ்மக்கள் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்ளும் உரிமையுள்ளது!- பொங்கியெழும் மக்கள் படையணி.

இனப் படுகொலையை ஏற்படுத்திய தரப்பிலிருந்து அல்லது அந் நாட்டிலிருந்து தனியானதொரு மொழியை பேசும் தனியானதொரு பண்பாட்டு விழுமியங்களை கொண்ட மக்கள் தொகுதி பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான நீதியானதும் நியாயமானதுமான உரிமையை கொண்டுள்ளது. இவ்வாறு பொங்கியெழும் மக்கள் படையணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் முழுவடிவம்..


அன்பான தமிழ் பேசும் மக்களே!

இக் காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை வெளியிடுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசினை பொறிக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவரதும் கவனத்திற்குமாக இத் தகவலை வெளியிடுகிறோம்.

அண்மைக்காலமாக சிங்கள அரசின் முகத்திரைகள் கலைந்து வரும் நிலையில் அதனை திசை திருப்பவும் தடுப்பதற்கும் தமிழ் மக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும் பல்வேறு பொறிமுறைகளை பயன்படுத்திவருகிறது. போர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் அதற்கு ஏற்றதுமான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்கிறது.

இதனடிப்படையில் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினை வழங்குவது போல பாசாங்கு செய்து கால அவகாசத்தினை தனக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச போர் குற்றவிசாரணையை மேற்கொள்ளவிடாது காய்களை.....மேலும்.


சத்தியமூர்த்தி பவனில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேனருக்கு தீவைப்பு!


Congress furious on burnt Sonia, PM, Rahul banners

சத்தியமூர்த்தி பவனில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது பேனருக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னை சோனியா.......மேலும்.


விளையாட்டு


கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி!

"கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரில், பராகுவே அணிக்கு எதிரான காலிறுதியில், "நடப்பு சாம்பியன்' பிரேசில் அணி, அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.

அர்ஜென்டினாவில், ஆண்களுக்கான "கோபா அமெரிக்கா' கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில், "நடப்பு சாம்பியன்' பிரேசில் அணி, பராகுவே அணியை சந்தித்தது.
விறுவிறுப்பான இப்போட்டி, ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. பின், இரு அணியினருக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்கள் ஏமாற்ற......மேலும்.

சங்கிலிய மன்னனின் சிலையை அகற்றி அதற்குப் பதிலாக கே.பி.யின்சிலை!

யாழ். குடாநாட்டில் தமிழ் மக்களின் வீரராகவும், தேசிய வீரராகவும் கருதப்படும் சங்கிலிய மன்னனின் சிலையை அகற்றி அதற்குப் பதிலாக கே.பியின் சிலையினையா அரசாங்கம் வைக்கப்போகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட.........மேலும்.

கிளிநொச்சி பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடாத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அனைவரும் உரையாற்றினார்கள்.

அதில் பா.உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் உரையாற்றிய போது அனைத்து மக்களும் சத்தம் எதுவுமின்றி மிகவும் அவதானமாக உரையினை செவிமெடுத்தனர்.

அவர் ஆற்றிய உரையைக் கேட்க.....

மகிந்தவின் வேலணை பிரச்சார உரையாற்றுகை.


வேலணை வங்களாவடிச் சந்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புச் சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த கலந்து கொண்டார். இன்று மாலை நடைபெற்ற மேற்படி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு உரையாற்றுகையில்,

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போது அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் தீவக மக்களுக்கும் எமது அரசுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் அந்த வகையில் அந்த மக்கள் எம்மோடு கைகோர்த்து நிற்பதாகவும் அது எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.





அந்த வகையில் பல அமைச்சர்கள் தற்போது யாழ் குடாநாட்டிற்கு வருகை தந்து மக்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அதற்குரிய வகையில் அந்த அமைச்சர்களும்.......மேலும்.


சிவாஜிலிங்கத்தின் அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் விசனம்.


அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரங்களுக்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளும் என்று எச்சரிப்பது போன்றதொரு அறிக்கையினை ஊடகங்களுக்கு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் கூட்டமைப்பு வட்டாரத்தை கடும் விசனமடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு வட்டாரங்களிடம் உரையாடியபோது, சிவாஜிலிஙகம் இப்பொழுது மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலிலும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீறியே செயல்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.


அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது. ஆனால் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார்.

இதன் காரணமாக அவர் கூட்டமைப்பிலிருந்து விலகநேரிட்டதும் அனைவருக்கும் தெரியும்.

அதனைப்போன்றே இப்பொழுதும் யாரிடமும் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக இப்படியொரு முடிவை ஊடகங்களுக்கு அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.


இவரது செயலில் உள்நோக்கம் ஏதும் இருக்குமோ.......மேலும்


கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட கொடூரமான விபத்து காரில் பயணம் செய்தவர்கள் உடல் நசிங்கி உயிரிழந்தனர்.
(படங்கள் இணைப்பு)
(பார்க்க பயம் என்றால் பார்க்கவேண்டாம்)













இன்றைய காணொளிகள்!
என்ன பாச்சல் இது?இதப்பாருங்க ஒருமுறை!


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com