ஞாயிறு, 31 ஜூலை, 2011

31.07.2011 இன் முக்கிய செய்திகள்


குடித்துவிட்டு தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் மாத்தளை பிரதேச மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாத்தளை வலய கல்விக் காரியாலயத்திற்கு மது அருந்திவிட்டுச் சென்று அங்குள்ள அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி தவறான முறையில் நடந்துகொண்டதாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய பாடசாலைகளின் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த ஆசிரியரை பணிநீக்கம் செய்யுமாறு தேசிய பாடசாலைகளின் பணிப்பாளர்

உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னரும் குடித்துவிட்டு அதிபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் குறித்த அசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாடு முழுவதும் பரவலாகப் பயன்படும் சூரியகாந்தியின் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் மருத்துவ பயன்களும் சூரிய காந்தியின் விதைகளில் அடங்கியுள்ளன. இன்றைக்கு தமிழ்நாட்டில் 80 சதவிகித சமையலறையை சூரிய காந்தி விதை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
சப்போனின்கள்-ஹீலியான்தோஸைடுகள்,A,B&C லினோலிக்,மிரிஸ்டிக்,பாலிமிட்டிக், ஒலியாக்,ஸ்டீரியக் அமிலம்,வைட்டமின்கள் A,D,மற்றும் E காணப்படுகின்றன. விதைகளில் அசிட்டோன்,ஃபார்மிக் அமிலம் மெத்தில் ஆல்கஹால் காணப்படுகின்றன.

கொழுப்புச் சத்து குறையும்.

சீதபேதியை குணப்படுத்தும்.காய்ச்சல், வயிற்றுவலி, வலியுடன் சிறுநீர்கழிதல், கண்வலியுடன் வீங்குதல், மண்ணீரல், கோளாறுகள், புண்களை ஆற்றும்.

விதைகள் பாக்டீரியா கொல்லிகள். சிறுநீர் கழிவை அதிகரிக்கும். கபம் வெளியேற்றும், காய்ச்சல் தணிக்கும், இருமல் ஜலதோஷத்திற்கு பயன்தரும். காற்று குழாய்,பேச்சுக்குழாய், மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்தும். எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

விதையில் உள்ள பொட்டாசியம் சத்து மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். ஒரு கோப்பை சூரிய காந்தி விதையில் ஆயிரத்து 300 மில்லி கிராம் பொட்டாசியம் காணப்படுவதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.

கால் கோப்பை சூரிய காந்தி விதையில் 32 சதவிகிதம் மெக்னீசியம் காணப்படுகிறது. இது நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. இதயம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.

மெனோபாஸ் டென்சனை குறைக்கும்

இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மெனோபஸ் கால டென்சனை குறைக்க உதவுகிறது.

புகைப்பழக்கத்தை மறக்கடிக்கும்
ஆண்டுகணக்கில் சிகரெட் புகைப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதில் சூரிய காந்தி விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கறுப்பு தோலை நீக்கிய சூரிய காந்தி விதைகளை சில நாட்கள் தொடர்ந்து மென்று தின்று வந்தால் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற பழக்கம் மறந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக. 'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம். மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.

முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார். எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும்.

செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.

தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்!

பெண்களைப் பொறுத்தவரை முன்பெல்லாம் நீண்ட தலைமுடியுடன் திகழ்வதையே அதிகம் விரும்புவார்கள். காலப் போக்கில் 'பாப்' உள்ளிட்ட பல்வேறு கட்டிங்குகள் வந்து விட்டன. பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது. தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.

1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.

2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும். எனவே அடிக்கடி நமது தலைமுடியை தண்ணீரால் கழுவக்கூடாது. அதற்கு பதிலாக நமது முடியின் மிருதுவான தன்மைக்கு ஏற்றவாறு நல்ல ஷாம்புகளை பயன்படுத்தலாம். பின் இயற்கை முறையிலோ அல்லது நல்ல டர்க்கி துண்டைக் கொண்டோ தலையை நன்றாக காய வைக்க வேண்டும்.

3. ஈரம் காய்வதற்கு முன்பாக தலை வாரினால் அதிகமாக முடி கொட்டிவிடும். எனவே தலை நன்றாக காய்ந்த பிறகுதான் தலை வாரவேண்டும். தலைமடியில் தூசு இருந்தால் விரல்களைக் கொண்டு மிருதுவாக எடுக்க வேண்டும்.

4. ஒரு சில நேரங்களில் நமது தலைமுடி வறட்சியாகக் காணப்படும். அப்போது நல்ல சலூனுக்குச் சென்று ட்ரிம் செய்யலாம். அப்போது நமது முடி அழகாக மாறும்.

5. நீளமான முடியை வளர்க்க விரும்பும் ஆண்கள் முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். உணவில் நிறைய வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. ஃப்ளானல் தலையணைகள் நமது தலைமுடியை விரைவில் உலர்த்திவிடும். எனவே அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.

7. குறிப்பிட்ட இடைவெளியில் ஹேர் ஸ்பா செய்ய வேண்டும். அது நமது தலைமுடியை மினுமினுப்பாக வைத்திருக்கும். பொதுவாக தலைமுடி 30 நாள்களுக்கு அரை இன்ச் அளவிற்குதான் வளரும்.

எனவே சலூன் போய் வந்தவுடன் முடி நீளமாக வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மிகவும் பொறுமையாக, உரிய முறையில் தலைமுடியை பராமரித்து வந்தால் தலைமுடி நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com