செவ்வாய் கிரகத்தில் தண்ணீர். நாசா விஞ்ஞானிகள் புகைப்பட ஆதாரத்துடன் தகவல்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2006-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது. அது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, அதன் அமைப்பை பல கோணங்களில் படம் எடுத்து நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்புகிறது.மேலும், அங்கு நிலவும் வெப்ப நிலை, ஈரப்பதம், போன்ற விபரங்களையும் அனுப்பி வருகிறது.
இதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்த போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்படட மாதிரிகளில் ஈரப்பதம் காணப்படுவதால், அங்கு நிச்சயம் தண்ணீர் இருக்க வேண்டும் என்று, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதுபற்றி செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான மைக்கேல் மெய்யர் கூறிய தாவது:-
செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல தடவை பரிசோதனை செய்தோம். அந்த ஆய்வுகளின் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தெரிய வந்துள்ளன.சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்.
வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்.
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.
அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.
இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.
அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர்.
மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.
கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் விஷம் கலந்த உணவை உண்டதால் நூற்றுக்கணக்கான விஷம் கலந்த ஒருவகை உணவை உட்கொண்ட காகங்கள் மட்டக்களப்பில் பல பகுதிகளில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பெரிய கோரதீவு கிராமத்தின் பல பகுதிகளிலேயே காகங்கள் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அனேகமான வீதிகளில் காகங்கள் இறந்து காணப்பட்டதோடு வீட்டுக்கூரைகள் கிணறுகள் மற்றும் வயல் வெளிகளிலும் காகங்கள் இறந்து நிலையில் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் டொக்டர் எஸ. சதுர்முகம் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

“விஷம் கலந்த ஒருவகை உணவை உட்கொண்டதாலேயே காகங்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சுகாதார ரீதியாக இதற்கு வேறு எவ்வித காரணங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் கூறினார். இதனால் ஏற்படக் கூடிய சுகாதார சீர்கேடுகளை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக