சனி, 6 ஆகஸ்ட், 2011

06.08.2011இன் சிறு செய்திகள்


லூனார் நாட்காட்டியின்படி சீனாவில் தற்போது ஏழாவது மாதம். கடந்த 31 ஆம் திகதியுடன் ஆரம்பம் ஆனது. பேய்களின் மாதம் என்று இது வர்ணிக்கப்படுகின்றது. அதிஷ்டம் இல்லாத மாதமாக சீனர்களில் பெரும்பாலானோரால் நம்பப்படுகின்றது. இம்மாதங்களில் பேய்களுக்கு ஆத்ம சாந்தி கோரி சமயச் சடங்குகள் மற்றும் வழிபாடுகள் ஆலயங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

சீனாவில் எஜிஆ நகரத்தை சேர்ந்த சிறுபான்மையினரான ஜி இன மக்களால் இப்பேய் மாதத்தில் கொண்டாடப்படுகின்றது பெண்களின் மார்புகளை ஆண்கள் தொடுகின்ற திருவிழா.
மாதத்தின் 14 ஆம், 15 ஆம், 16 ஆம் நாட்களில் கொண்டாடப்படுகின்றது. இந்நாட்களில் பெண்களின் மார்புகளை ஆண்கள் தொடுகின்றமை பெரிதும் வரவேற்கப்படுகின்றது. சுயி அரச வம்சத்தினர் கி.பி 581 முதல் கி.பி 618 வரை சீனாவை ஆட்சி செய்தனர். இக்காலப் பகுதியில் ஜி இனத்தைச் சேர்ந்த ஏராளமான ஆடவர்கள் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். போரில் இறந்தனர். இவர்கள் பெண் வாடையே பட்டு இராதவர்கள். பெண்களை தொட்டு இராதவர்கள். எனவே இவர்களின் ஆவிகள் பரிசுத்தமான, ஆடவர்களின் கைகள் பட்டு இராத 10 பெண்களை இந்நாட்களில் சொந்தமாக்கிக் கொள்ள பார்க்கின்றன என்பது ஜி இன மக்களின் பாரம்பரிய நம்பிக்கை.

ஆகவே ஆவிகளிடம் இருந்து தப்பிக் கொள்கின்றமைக்காக 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்புகளை ஆண்கள் தொட்டுக் கொள்கின்றமையை அனுமதிக்கின்றார்கள். மார்புகளை தொடுங்கள் என்று ஆண்களை கேட்டுக் கொள்கின்றார்கள் இந்த மாதத்தில் பெண்கள்.

(காணொளி இணைப்பு )


நகைச்சுவையின் மூலமாக உலகையே கட்டிப் போட்டவர் மிஸ்டர் பீன். இவரது இயற்பெயர் ரோவன் அட்கின்ஸன். 56 வயதான இவர் பி.பி.சி.யின் பிளாகேடர் என்னும் தொலைக்காட்சி தொடரில் மிஸ்டர் பீன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பிரிட்டனில் உள்ள பீட்டர்போரோ என்னுமிடத்துக்கு அருகேயுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் இவர் பயணம் செய்த இவரது மாக்லொரேன் சூப்பர் கார் விபத்துக்குள்ளானது.


இதில் லேசான காயங்களுடன் பீன் தப்பித்தார். இவர் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு விளக்குக் கம்பத்துக்கும், ஒரு மரத்துக்கும் நடுவில் கார் மோதி தீப்பிடித்தது.

தீப்பிடித்து நொறுங்கிப்போன காரின் இடிபாடுகளிலிருந்து எழுந்து பீன் உயிர் தப்பியமை இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com