திங்கள், 8 ஆகஸ்ட், 2011

07.08.2011 இன் சிறு செய்தகள்

ஒரு உறவுக்காக வடக்கு லண்டனில் குவித்த கறுப்பின உறவுகள்.

கறுப்பு இனமக்கள் அதிகம் வாழும் வடக்கு லண்டன் டொடென்ஹாம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைகளில் பல கட்டிடங்கள், வாகனங்கள், தீக்கிரையாக்கப்பட்டதுடன், அப்பகுதியில் காவல்கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதும் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதனால் காவல்துறையினர் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வியாழக்கிழமை அப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், இச்சம்பவத்தில் 29வயதான மார்க் டக்கன் என்ற கறுப்பு இன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் எதிரொலியாகவே நேற்றிரவு
இப்பகுதியில் வன்முறைகள் வெடித்துள்ளன.





காவல்துறையினரின் வாகனங்கள், மற்றும்
பிரயாணிகள் பேருந்து, மற்றும் பொது
கட்டிடங்களுக்கும் ஆர்ப்பாட்டகாரர்கள்
தீவைத்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த போதிலும் வாகனங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு உள்துறை செயலாளர் திரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நகர காவல்துறையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் நாசகார வேலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வன்முறை ஒரு போதும் பிரச்சினைக்கு தீர்வாக முடியாது என்றும் தலைமை அமைச்சர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலமை இப்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்ற போதிலும் இப்பகுதியில் பதற்றமான சூழலே காணப்படுவதாக நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு லண்டன் நகரான ரொட்டென்ஹாமில் வீதிகளில் அவசர சேவைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்று காலையிலும் கிரிமினல் நடவடிக்கை இடம்பெற்றதாகவும் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

லண்டன் தீயணைப்புப்படையினர் கட்டங்கள் எரிவதை அணைப்பதில் ஈடுபட்டிருந்தனர். தீ பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

‘ கடந்த இரவு ரொட்டன்ஙாமில் இடம்பெற்ற வன்செயலை கண்டிக்கின்றேன்’ என்று உள்துறைச் செயலாளர் திரேஸா மே தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுச் சொத்துக்களை அழிப்பது ஆகியனவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் சொன்னார்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நகர காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவும் உண்டு என்றும் அவர் சொன்னார்.

ரொட்டன்ஹாம் கலவரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தலைமை அமைச்சரின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாயுடன் சங்கிலியில் கட்டப்பட்ட சீன சிறுவன்:கோரமான பெற்றோர்.

இன்றைய நவ நாகரிக உலகில் இந்த சீனச் சிறுவனின் பரிதாப நிலையைப் பாருங்கள். 12 வயதேயான குறித்த சீனச் சிறுவன் தனது மாமாவினால் இரண்டு வருடங்களாக சங்கிலியினால் கட்டப்பட்டு உள்ளான்.

குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டதால் தான் சொந்த பாதுகாப்பு கருதி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் படங்களைப் பார்த்த பின்னர் ஏராளமான பொது மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

வடகிழக்கு சீனாவின் Heilongjiang மாகாணத்தில் உள்ள Erlongshan என்ற கிராமத்தில் உள்ள மாமாவின் வீட்டிற்கு வெளியே சிறுவன் கட்டி வைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவனது மாமாவான Cai Quan கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுவனால் பேச முடியாது. தாமதமாகவாவது பேசுவான் என்று அவரது பெற்றோர்கள் நம்பினார்கள்.

ஆனால் அவன் மனதளவில் ஊனமுற்றவனாகக் காணப்படுகின்றான்.


ஆழ்கடல் பகுதியில் இருந்த சுறா மீனை பாறைகளின் நடுவில் ஒழிந்து கொண்டிருந்த Octopus, மிகவும் புத்திசாலித்தனமாக வேட்டையாடிய நேரடிக் காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

காண்டா மிருகத்திற்கு நடந்த
கொடுமை
(படங்கள் இணைப்பு)

தென்கிழக்கு ஆசியா பகுதியில் மருத்து
தயாரிக்க காண்டாமிருகத்தின் கொம்பு
பயன்படுத்த
படுகிறது. இதற்காக ஆப்பிரிக்க காட்டில்
லுள்ள
காண்டா மிருகத்தை கொன்று அதன்
கொம்புகளை
திருடி வருகிறார்கள்.
கொம்பால் தயாரிக்கும் மருந்துகள்

காண்டா மிருகம் மற்றும் யானைகளை
காக்கும்
பணியில் ரோந்துக்கு சென்றபோது
அதிகாரிகள்,
இரத்த வெள்ளத்தில் கிடந்த காண்டா
மிருகத்தை
பார்த்தனர். பின் அந்த காண்டாமிருகத்தின்
கொம்பை
திருடிய திருடனை வனத்துறை அதிகாரிகள்
வளைத்து பிடித்தனர்.

கள்வனை மடக்கி பிடிக்கும் வீரர்கள்.
காயத்துடன் காணப்படும் காண்டாமிருகம்.
காயங்களை மாற்றுவதற்காக வனவிலங்கு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முட்பாடும் வீரர்கள்.

ஒருவழியாக, தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா. அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பது உண்மைதான். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல என்று கூறியுள்ளார். த்ரிஷாவின் திருமண விவகாரத்தில் அவருக்கும் அவரது அம்மாவுக்கும் மவுன யுத்தம் நடக்கிறது.

த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடும் நோக்கில் மணமகன்களை அலசி வருகிறார் தாயார் உமா கிருஷ்ணன். அப்படி அவர் முடிவு செய்தவர்தான் அம்ருத் என்ற தொழிலதிபர். இவர் த்ரிஷாவின் நண்பரும் கூட. ஆனால் காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று தொடர்ந்து கூறிவரும் த்ரிஷா அவரது அம்மாவின் முடிவை ஏற்கவில்லை.

இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் என அம்மா உமா செய்தி கொடுப்பதும், அதை மறுத்து த்ரிஷா பேட்டியளிப்பதும் தொடர்ந்தது. இப்போது ஒருவழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாராம் த்ரிஷா. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, "அடுத்த ஆண்டு என் திருமணம் நடக்கும். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல. அவர் என் நண்பர்தான். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை," என்றார்.

பிரபல்யமான இன்டெல் நிறுவன பெயர் உருவான விதம்.


தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
2. ஆப்பிள் (APPLE):ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது.
ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும்.ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார்.ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர்.
இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது.அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது.இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர்.அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
4.ஹாட் மெயில் (HOTMAIL):இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார்.

அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார்.ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம்.HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது.முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL):இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர்.
ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர்.பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT):பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது.
முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம்.அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது.
அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.7. யாஹூ (YAHOO):

தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது.ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார்.இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும்.யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com