திங்கள், 8 ஆகஸ்ட், 2011

08.08.2011இன் சிறு அதிசய செய்திகள்

61 வயது அமெரிக்க பெண் டயானா நியாத் கியூபாவில் இருந்து (103 km)அமெரிக்காக்கு நீந்தி கடந்து புதிய சாதனை!

61 வயது அமெரிக்க பெண் டயானா நியாத் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் வரை கடலில் நீந்தி வருகிறார்.

இந்த இரு பகுதிகளை நீந்திக் கடக்கும் முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைக்கப் போகிறது. டயானா நியாத் நேற்று கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து சாதனை நீச்சலை துவக்கினார்.


அவர் புதன்கிழமை ப்ளோரிடாவின் கீ வெஸ்ட் பகுதியை வந்தடைவார். இருநாடுகள் இடையே ராஜிய உறவு இல்லாத நிலையில் டயானா நீந்துவதற்கு அனுமதி அளிக்க ஒரு வருடம் ஆலோசனை நடந்தது.


டயானா சுறா பாதுகாப்பு வளையம் இல்லாமலேயே தண்ணீரில் வேகமாக நீந்தி வருகிறார். 1970ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற நீண்ட தூர நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்தவர் டயானா நியாத் ஆவார்.

டயானாவுக்கு 28 வயது இருக்கும் போது 1978ம் ஆண்டில் கியூபாவில் இருந்து அமெரிக்கா வரை நீந்தி கடக்க முயன்றார். அந்த முயற்சி உரியபலன் தரவில்லை. தனது 61 வயதில் டயானா மீண்டும் சாதனை முயற்சியை துவக்கி உள்ளார்.

சுறாக்கள் அதிகம் உள்ள தண்ணீர் பகுதியில் 103 மைல் தொலைவை ஹவானா கீவெஸ்ட் இடையே டயானா நீந்தி கடக்கிறார்.

நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 30 ஆண்டுகள் ஆனாலும் தனது வாழ்க்கை கனவான கியூபா அமெரிக்கா நீச்சலை இப்போது மேற்கொள்கிறேன் என டயானா பெருமிதத்துடன் கூறுகிறார்.


ஒரே நாளில் தாயும் இரு மகள்களும் மார்பகங்களைப் பெரிதாக்கும் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்காக கையெழுத்திட்டுள்ளனர்!

ஏதோ கடைக்கு ஷொப்பிங் போவது போல போட்டு வந்திருக்கிறார்கள் இந்த தாயும் மகள்களும். தாயும் இரண்டு மகள்களும் ஒரே நாளில் மருத்துவமனைக்குச் சென்று மார்பகங்களைப் பெரிதாக்கும் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்காக கையெழுத்திட்டுள்ளனர்.

தாயாரான 47 வயதான Geraldine மற்றும் மகள்களான 23 வயதான Katie 21 வயதான Daniella ஆகியோருக்கே ஒரே நாளில் மார்பகத்தைப் பெரிதாக்கும் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

30 வருடங்களுக்கு முன்னர் தான் விரும்பியிருந்தது இப்போது தான் நிறைவேறுவதாக தாயாரான Geraldine தெரிவித்துள்ளார்.

ஏன் தன்னால் முடியாது? என்று தனது இளைய வயது மகள் தான், குறித்த அறுவைச் சிகிச்சைக்கு தன்னை ஊக்குவித்ததாகவும் கூறுகிறார் Geraldine.

குறித்த அறுவைச்ச்சிகிச்சைக்கு 3500 ஸ்ரேலிங் பவுண்கள் செலவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவரான Sultan Hassan கருத்துத் தெரிவிக்கையில்,

தாயும் மகள்களும் இப்படியான அறுவைச்ச்சிகிச்சைக்கு வருவது அபூர்வமான விடயம் என்று கூறினார்.


ஒரு செல்லப்பிராணி மீது வைத்திருந்த பாசத்தை பாருங்கள்!

தனது நாய் நீரில் விழுந்து தவித்துக்கொண்டு இருப்பதை பார்த்த எயமானி உடன் தன உயிரை துட்சம் என நினைத்து ஆழமான மிகவும் பயங்கரமான் நீரேரியில் குதித்து தன செல்லப்பிராணியை காப்பாற்ற மிகவும் போராடி கடைசியில் தன்னையும் தன்னுடைய செல்லப்பிராணியின் உயிரையும் மீட்டார்.


இந்த நிகழ்வை கண்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் வியந்தே போயினர்.பின் அந்த செல்லப்பிராணியை சுழன்று சுழன்று போட்டோ எடுத்தனர்.



கிணற்றுக்குள் திடீரென கார் பாய்ந்து 2 பெண்கள், டிரைவர் பலியாகினர். 2 குழந்தைகள் படுகாயத்துடன் தப்பினர்.
கோவை அருகே கிணற்றுக்குள் திடீரென கார் பாய்ந்து 2 பெண்கள், டிரைவர் பலியாகினர். 2 குழந்தைகள் படுகாயத்துடன் தப்பினர்.
கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடை மணியகாரதோட்டத்தை சேர்ந்தவர் திவாகர். கோவை பெரியகடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இந்திரஜித்(6), பவன்ஜித்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை மீனா, திவாகரின் தாய் வசந்தாமணி(51) ஆகிய இருவரும் காரில் கடையை திறக்க புறப்பட்டனர். 2 குழந்தைகள், டிரைவர் சிவா(37) ஆகியோர் உடன் சென்றனர். மீனா காரை ஓட்டினார்.

திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் முன் இருந்த கிணற்றுக்குள் தலை குப்புற பாய்ந்தது. 120 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை.

இதை வீட்டில் இருந்து பார்த்த திவாகரும், அவரது தந்தை அய்யாசாமியும் அலறியடித்து விரைந்து வந்தனர்.

இருவரும் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். படுகாயத்துடன் கிடந்த 2 குழந்தைகளையும் தோளில் தூக்கி மேலே வந்தனர். இருவரையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கோவை தீயணைப்பு நிலைய வீரர்கள் வசந்தாமணி, மீனா, டிரைவர் சிவா ஆகியோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு 3 பேரும் பலத்த அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. 3 சடங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி சண்முகம் விரைந்து சென்று விசாரித்தார். பேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். கண் முன்னாலேயே வசந்தாமணியும், மீனாவையும் பறிகொடுத்த அய்யாசாமியும், திவாகரும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மீனா தற்போது தான் கார் ஓட்ட பழகியுள்ளதாக தெரிகிறது. அதனால், தவறுதலாக ஆக்சிலேட்டரில் கால் வைத்து அழுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.


நித்யானந்த தியான பீட பக்கதர்கள் உணவு உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்தனர்!

நித்யானந்த தியான பீடம் சார்பில் ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டம் அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் எதிரில் நேற்று நடந்தது. தியான பீடத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் 20 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது.


அங்கிருந்த ஒரு மரத்தில் ஆணி அடித்து நித்யானந்தா போட்டோ மாட்டியிருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக வெளியே சென்றனர்.

அருகே உள்ள கடைகளுக்கு சென்று வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் ஆப்பிள், ஆரெஞ்சு ஜூஸ் குடித்து விட்டு, மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்து கொண்டனர். பட்டினி போராட்டத்தில் அவ்வப்பொழுது தண்ணீர் பாட்டில், ஐஸ் கிரீம், ஸ்நாக்ஸ் வகைகள் வினியோகிக்கப்பட்டது. அவற்றை சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண்கள் இறுக்கமான முகத்துடனேயே அமர்ந்து இருந்தனர்.

அவர்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெரிந்தது. பேசிய ஒவ்வொருவரும் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள் தொடர்பாகவே பேசினர். அப்போதெல்லாம் பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டு சிரித்தனர். ஒரு சிலர் முகம் சுழித்தனர். மதியத்திற்கு பிறகு பலர் ஓரமாக சென்று தூங்கி விட்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒருவர் கூட வரவில்லை. பாதுகாப்புக்கு போலீசார் மட்டுமே வந்திருந்தனர்.

அந்த வழியாக நடந்து சென்றவர்களில் சிலர் வேடிக்கை பார்த்தனர். தங்களுக்குள் கமென்ட் அடித்து சிரித்தபடியே கலைந்ததை மட்டுமே காண முடிந்தது. வேடிக்கை பார்ப்பவர்கள் பார்வையில் படுவதை தவிர்க்க, பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டனர்.

ரஞ்சிதா வராததால் கூட்டம் இல்லை

போராட்டத்திற்கு நடிகை ரஞ்சிதா வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் வந்திருந்தனர். ‘‘ரஞ்சிதா வருவாரா?’’ என்று கூட்டத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். ஆனால், தியான பீடம் நிர்வாகிகள் பதில் ஏதும் கூறவில்லை. ரஞ்சிதா வரவில்லை என்று தெரிந்ததும், அவர்கள் சென்று விட்டனர்.

சீனாவில் 650 அடி உயரத்தில் அந்தரத்தில் நடக்கும் முயற்சி தோல்வி.

சீனாவை சேர்ந்த சாகச வீரர் சைமாய்தி அய்ஷன் (27). உயரமான கட்டிடங்கள் இடையே கயிறு கட்டி அதில் நடப்பது உள்பட பல சாதனைகள் படைத்துள்ளார். 2 ராட்சத பலூன்கள் இடையே கயிறு கட்டி அதில் நடந்து சாகசம் செய்யப்போவதாக அய்ஷன் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிகழ்ச்சி சீனாவின் ஹுனான் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.
வெப்பக் காற்றில் இயங்கும் 2 ராட்சத பலூன்கள் இடையே 45 அடி நீள இரும்பு கம்பி கட்டப்பட்டது. கீழே பாதுகாப்பு வலை கட்டப்படாமல் இந்த சாகசம் செய்யப்போவதாக அய்ஷன் தெரிவித்தார். கையில் நீளமான கம்புடன் பலூனில் ஏறினார். ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.தரையில் இருந்து 100 அடி உயரத்தில் பறக்கும்போது, வெற்றிகரமாக ஒரு பலூனில் இருந்து இன்னொன்றுக்கு கம்பி வழியாக நடந்து சென்று அசத்தினார்.

பின்னர், பலூன் இன்னும் உயரே கிளப்பப்பட்டது. 328 அடி உயரத்தில் பறக்கும்போது, நடந்து செல்லும் சாகசத்தை தொடங்கினார் அய்ஷன். எதிர்பாராதவிதமாக காற்று வேகமாக வீச தொடங்கியது. பேலன்ஸ் செய்ய முடியாமல் திணறிய அய்ஷன், கை பிடி நழுவியது. கையில் இருந்து கம்பு கீழே விழ.. இரும்பு கம்பியை பிடித்து தொங்கினார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
‘‘650 அடி உயரத்தில் பறந்து 4-வது முறையாக கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாக முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இதே சாதனையை விரைவில் படைப்பேன்’’ என்றார். சீன அளவில் அதிக உயரத்தில் நடந்து சென்ற வீரர் என்ற சாதனையை அய்ஷன் படைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com