லண்டன் பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
லண்டன் கலவரம் இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை லண்டனின் வடக்கில் உள்ள டாட்டன்ஹாம் மாவட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது அங்கு நடந்து வந்த அமைதியான ஊர்வலத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மார்க் டுக்கான் என்ற 29 வயது இளைஞர் உயிரிழந்தார். இவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார். இதையடுத்து கலவரம் வெடித்து விட்டது.
லண்டன் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. தீவைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல், ஏடிஎம் இயந்திரங்களை சூறையாடுதல் என வன்முறைக் காடாக மாறியுள்ளது லண்டன். இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது.

இங்கிலாந்து வாழ் ஆசியர்கள் சகேதரர்களான ஷாசாத், ஹாரி ஹுசைன். அவர்களது நண்பர் முசாவர் அலி. அவர்கள் பிர்மிங்ஹாமில் கார் கழுவும் கடை வைத்துள்ளனர். லண்டன் கலவரம் அங்கும் பரவியதால் அவர்கள் தங்கள் கடையை கலகக்காரர்கள் தாக்காமல் பாதுகாத்து வந்தனர். நேற்றிரவு அந்த 3 பேரும் மசூதியில் தொழுதுவிட்டு, கடையைப் பாதுகாக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று 2 கார்கள் அசுர வேகத்தில் வந்து அந்த 3 பேர் மீதும் மோதின. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
அந்த மூவரும் ரோட்டோரமாகத் தான் சென்றனர். வேண்டும் என்றே அவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளனர். ஆம், இதை கொலை என்று தான் சொல்ல வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
இது தொடர்பாக போலீசார் ஒரு 32 வயது நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கலவரக்காரர்கள் பிளாக்பெர்ரி போனின் மூலம் செய்தி அனுப்பி நாட்டின் பிற பகுதிகளிலும் கலவரத்தை தூண்டச் சொல்கின்றனர். இதனால் கலவரத்தை தூண்டப் பயன்படுத்தும் கருவாகியாக மாறியுள்ளது
பிளாக்பெர்ரி. கலவரக்காரர்கள் பிளாக்பெர்ரி மொபலை பயன்படுத்தி தகவல் அனுப்பி பிற பகுதிகளிலும் கலவரத்தை தூண்டிவிடுகின்றனர்.நாங்கள் இங்கே கொள்ளையடித்துவிட்டோம், தற்போது கிழக்கு லண்டனுக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒரு கலவரக்காரர் பிளாக்பெர்ரியில் செய்தி அனுப்பியுள்ளார். விலை உயர்வான பொருட்கள், டிசைனர் உடைகள், மதுபானங்கள், சைக்கிள்கள் விற்பனை செய்யும் கடைகளின் முகவரிகளை குறுந்தகவலாக அனுப்பி அவற்றை சூரையாடச் சொல்லி வருகின்றனர்.
ஆங்காங்கே கடைகள் பற்றி எரிந்துகொண்டிருக்கையில் சிலர் முகமூடி அணிந்துகொண்டு செல்போன்களில் குறுந்தகவல் அனுப்புவதாகக் கூறப்படுகின்றது. உலகில் சுமார் 45 மில்லியன் மக்கள் பிளாக்பெர்ரி மூலம் தகவல்கள் மற்றும் படங்களை அனுப்புகின்றனர்.
கலவரத்தை பரப்ப பிளாக்பெர்ரி பேருதவியாக இருப்பதால் குறுந்தகவல் அனுப்பும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிளாக்பெர்ரி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் 45 மில்லியன் பேர் பாதிக்கபடுவார்கள் என்று கூறி அந்த கோரிக்கையை பிளாக்பெர்ரி நிராகரித்துவிட்டது. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குருத்வாராவை பாதுகாக்கும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள்
லண்டனில் கலவரம் மூண்டதையடுத்து ஆங்காங்கே தாக்குதல், தீவைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களை கையில் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.சவுதாலில் குரு சிங் சபா குருத்வாரா உள்ளது. கையில் ஹாக்கி ஸ்டிக் மற்றும் வாள் ஏந்திய சுமார் 700 சீக்கியர்கள் இந்த குருத்வாராவை பாதுகாத்து வருகின்றனர். சவுதாலில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். கலவரக்காரர்களிடம் இருந்து தங்கள் வீடு, கடை ஆகியவற்றை பாதுக்காக்கத் தான் சீக்கியர்கள் ஆயுதம் எடுத்துள்ளனர்.
அவர்கள் போலீஸ் உதவியுடன் தான் காவல் காத்து வருகின்றனர்.லண்டன் கலவர பூமியாக மாறியதை அடுத்து இங்கிலாந்து பிரதமர் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். 4 நாட்கள் ஆகியும் கலவரம் அடங்கும்பாடில்லை. இனியும் கலவரம் தொடர்ந்தால் பிளாஸ்டிக் புல்லட்டுகளைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.நேற்றிரவு கான்னிங் சர்கஸ் காவல் நிலையத்தை ஒரு கும்பல் குண்டு வைத்து தகர்த்தது. லெஸ்டரில் சுமார் 100 இளைஞர்கள் கடைகளைக் கொள்ளையடுத்து அந்தப் பொருட்களை போலீசார் மீது வீசினர்.
யாழ்.உரும்பிராய் தெற்கில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றுகாலை மீட்பு.முன்னாள் காதலர்களாக இருந்த இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் கோப்பாய் இராசவீதியில் இடம்பெற்றுள்ளது.
உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த அருளன் தனபாலசிங்கம் (43) மற்றும் மயூரன் இந்துசா (24) ஆகிய இருவருமே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் முன்னாள் காதலர்கள் எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்து வேறு நபர்களை திருமணம் செய்துள்ளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அருளன் தனபாலசிங்கம் என்பவருக்கு 4 பிள்ளைகள் இருப்பதாகவும், மனைவி பிள்ளைகளடன் தனித்து வாழ்ந்து வருகின்றார்.

இவரது முதல் மகள் திருமணமாகி அவருக்கும் ஒரு குழந்தை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று மயூரன் இந்துசாவிற்கும் இரு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களது காதல் தொடர்பை ஊரார் எதிர்த்ததினால் பனைமரத்தில் கயிற்றினால் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிருவரும் பயணித்திருக்கலாமென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி அப்பகுதியில் அநாதரவாக காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் செய்திகள் இவ்வாறிருக்கையில், இவர்கள் இருவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. ஒரே கயிற்றின் இருமுனைகளும் கழுத்துகளில் கட்டப்பட்டவாறு சடலங்கள் தொங்கவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவ மாணவிகளுக்கு களவாக தங்குவதட்கு வாடகைக்கு அறைகள் எடுத்துக்கொடுக்கும் மர்ம நபர்கள்
தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகள்
நடைபெறும்
பகுதிகளில் மக்கள் குடியிருக்காத வீடுகளின்
அறைகளை இளம்பராய ஜோடிகளுக்கு
வழங்கிய
பல நபர்களையும் குழுக்களையும் பொலிஸார்
தேடி வருகின்றனர். பெரும்பாலும்
பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய
ஜோடிகளுக்கு இந்நபர்கள் அறைகளை வழங்கி
வருவதாக பொலிஸ் வட்டாரங்கள்
தெரிவித்தன. பிரத்தியேக வகுப்புகளில் படிக்க
இவர்களைப் பெற்றோர் கொண்டு சென்று
விட்ட, மறு நிமிடமே அவர்கள்
அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம்.
பெற்றோர் அவ்விடத்தில் இருந்து
புறப்பட்டதும் இவர்களும் அவ்விடத்தில்
இருந்து
தனது ஜோடியுடன் புறப்பட்டு பூட்டியிருக்கும்
வீடுகளுக்குச் சென்று விடுகின்றனராம். இப்படி
சென்ற சில ஜோடிகள் வகுப்பு முடிந்த
பின்னரும்
வெளியே வராததால் அவர்கள் பெற்றோரிடம்
மாட்டியுள்ளனர்.

பல பெற்றோர்கள் இதுபோலத் தமது
பிள்ளைகள்
நடந்துகொள்வதாகக் கொடுத்த புகாரை
அடுத்து பொலிசார் குறித்த அப்பகுதிக்குச்
சென்று பூட்டியிருந்த வீடுகளை
சோதனையிட்டுள்ளனர். பள்ளிக்கூட
ஜோடிகள் வந்து உல்லாசமாக
இருந்துசென்ற தடையங்கள் இருந்தாலும்,
இதனை ஒழுங்கு செய்து கொடுக்கும்
கும்பல் எஸ்கேப் ஆகிவிட்டனராம்.
படு உஷாராக அவர்கள் செயல்பட்டு
தப்பிவிட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இக்குழுவினர், பிலியந்தலை, நுகேகொடை,
மஹரகம பகுதிகளிலுள்ள கைவிடப்பட்ட
வீடுகளில் மணித்தியால அடிப்படையில்
இளம் ஜோடிகளுக்கு அறைகளை வாடகைக்கு
விடுவதாக பொலிஸ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. எனினும் இதுவரை
எவரும் கைது செய்யப்படவில்லை எனவும்
பொலிஸார் கூறினர்.
ஐந்து நாட்கள் அறையில் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தல்:ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் இளம் பெண்.
5 நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்தில் உள்ள பாட்டாக் கடை ஒன்றில் பணிபுரியும் ஆணுக்கும் நாரந்தனை வடக்குப் பகுதியில் வசிக்கும் 19 வயது கொண்ட இளம் பெண்ணுக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப் பெண்ணை கடந்த ஐந்து நாட்களுக்கு முன் விடுதி ஒன்றில் தங்க வைத்து மேற்படி காதலனால் தொடர் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின் நேற்று வீடு திரும்பிய பெண் மயக்கமுற்று விழவே, அவரது தந்தை அப் பெண்ணை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இம் மயக்க நிலை தொடர்பில் அப் பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியசாலை வட்டாரங்கள் உண்மை நிலையை அறிந்து ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே, தான் காதலனால் ஐந்து நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது அப் பெண் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இப் பெண் கடந்த ஐந்து நாட்களாக வீடு திரும்பாத நிலையில் அவரின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்திலோ அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி, இலங்கையின் போர்க் குற்றங்கள் காணொளிகள்.
புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான வாக்குமூலங்கள் அடங்கிய புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரண்டு மணிநேரத்தை உள்ளடக்க்கிய இப்புதிய ஆவணப்படம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை இரவு இந்திய நேரப்படி மாலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரை ஒளிபரப்பியது.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ''இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற ஆவணப்படத்தை 3 நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும்.இந்நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka�s Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார்.
மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்ட சிலரது அவலம் நிறைந்த வாக்குமூலங்கள் அடங்கிய இப்படத்தொகுப்பைக் காண...
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலமான தற்போது நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் நல்லூர் கந்தன் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்வதாகவும், பலர் தமது நேர்த்திகடன்களை செய்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் இன்று தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பெய்ஜிங்: சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் இன்று தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட மிகச் சில நாடுகளிடம் தான் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அந்த நாடுகளிடம் தான் விமானம் தாங்கிக் கப்பல்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
உலகில் மொத்தமே 9 நாடுகள் தான் இந்த வகை கப்பல்களைக் கொண்டுள்ளன. இதில் அமெரிக்காவிடம் 11 கப்பல்கள் உள்ளன. மற்ற எல்லா நாடுகளையும் சேர்த்தாலே உலகிலேயே மொத்தம் 21 விமானம் தாங்கிக் கப்பல்கள் தான் இப்போது சர்வீசில் உள்ளன.
இதில் இந்தியாவிடம் உள்ள ஐஎன்எஸ் விராட் கப்பல் இங்கிலாந்திடம் வாங்கப்பட்டது. 1953ம் ஆண்டு இதை பிரிட்டன் கட்டியது. 1986ம் ஆண்டு இதை இந்தியா வாங்கியது. இந்தக் கப்பல் 2019ம் ஆண்டில் டி-கமிஷன் செய்யப்பட்டு, கடற்படையிலிருந்து விலக்கப்பட்டுவிடும்.
இதற்கு முன் இந்தியாவிடம் இருந்த இன்னொரு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் வி்க்ராந்த், 20 வருட சேவைக்குப் பின் 1997ம் ஆண்டில் கடற்படையிலிருந்து விலக்கப்பட்டது. இதுவும் இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் கப்பல் தான்.
இந் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து அட்மிரல் கோர்ஸ்காவ் என்ற விமானம் தாங்கிக் கப்பலை வாங்கியுள்ளது இந்தியா. இதுவும் சோவியத் யூனியனால் பயன்படுத்தப்பட்ட பழைய கப்பலே. இதை நவீனமாக்கும் வேலைகளை இந்தியாவுக்காக ரஷ்யா செய்து வருகிறது. இது இந்தியாவிடம் வந்து சேர மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்.
இந் நிலையில் இதுவரை விமானம் தாங்கிக் கப்பலே இல்லாமல் இருந்த சீனா முதல் முறையாக அந்தக் கப்பலை கடற்படையில் இப்போது சேர்த்துள்ளது.
சோவியத் யூனியனால் இந்தக் கப்பல் கட்டப்பட்டு வந்தது. ஆனால், 1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் என்ற நாடே சிதைந்து போன நிலையில், இந்தக் கப்பல் உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தக் கப்பலை கட்ட போதிய நிதி வசதியில்லாமல் உக்ரைன் தவிக்க, 10 ஆண்டுகளுக்கு முன் இதை சீனா வாங்கியது.
சீனாவிடம் இதைத் தரும் முன் அதிலிருந்த என்ஜின்கள் மற்றும் ஆயுதங்களை உக்ரனை அகற்றிவிட்டது.
ஆனாலும் அதை வாங்கிய சீனா, கப்பலுக்கு என்ஜினையும் உருவாக்கியதோடு, இதற்கான ஏவுகணைகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் தானே தயாரித்துப் பொறுத்தி இன்று கப்பலை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டது. சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள டாலியன் போர்ட் துறைமுகத்திலிருந்து இந்தக் கப்பல் இன்று கடலுக்குள் செலுத்தப்பட்டது.
கோயிலில் உடைக்கப்பட்ட அதிசய
தேங்காய் (படங்கள் இணைப்பு) |
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை
மாநகரத்தில் உள்ள வில்லிவாக்கம் ஐயப்பன்
ஆலயத்தில் அற்புதம் ஒன்று கடந்த வாரம்
இடம்பெற்று உள்ளது. கோவிலில் கடந்த
சனிக்கிழமை தேங்காய் ஒன்று இரண்டாக
வெட்டப்பட்டது. தேங்காயின் உட்புறம்
வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக்
கொண்டிருந்தது.
|


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக