இங்கிலாந்தின் உள்ள கிரேட் யார்மவுத் கடற்கரையில் பெக் ஆண்டர்சன்(15) என்ற சிறுமி தனது அக்கா, தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
மணலை சுவர் போல அமைத்து அதன் கீழே பிரமாண்ட குழி பறித்தனர். இன்னும் அதிக தூரத்துக்கு குகை அமைப்பதற்காக பெக் உள்ளே சென்றாள். அப்போது எதிர்பாராவிதமாக மணல் சுவர் சரிந்தது. வெளிப் பக்கம் விளையாடிய சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பெக் மட்டும் உள்ளே சிக்கினாள். தகவல் கிடைத்து பொலிசார், கடலோர பாதுகாப்பு வீரர்கள் விரைந்தனர். கால் மணி நேர போராட்டத்துக்கு பிறகு பெக் மீட்கப்பட்டாள்.
பேச்சு, மூச்சின்றி இருந்த பெக் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருக்கிறாள்.
"மண்ணில் புதைந்ததால் கால் மணி நேரம் மூச்சு விட முடியாமல் இருந்திருக்கிறாள். அவள் பிழைத்தது அதிர்ஷ்டவசம்" என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என கடவுளிடம் வேண்டுகின்றோம்!

கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் கருச்சிதைவுகள் காரணமாக இளம் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை பூநகரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவ்வாறு மரணமாகியுள்ளார்.
|
இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான லாக்சன் ரஜனிதேவி (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண்ணே மரணமானவராவார். இந்த இளம்பெண் 3 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் சட்டத்துக்கு முரணான வகையில் வீட்டிலேயே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிக அளவான இரத்தப்போக்கு ஏற்பட்டது எனவும் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மேற்படி சிறுவன் செவ்வாய்க்கிழமை பகல் திருவையாறு பிரதேசத்தில் நின்றதாக பொதுமக்கள் கொடுத்த பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மாவட்டப் பொலிஸார் குறித்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டு நேற்று முன்தினம். நீதிமன்றில் பொலிஸார் அஜர்ப்படுதியிருந்தனர்.
இதன்போதே சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் சிறுவனை சான்றிதழ் பெற்ற சிறுவர் காப்பகம் ஒன்றில் இணைத்து விடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை குறித் சிறுவன் சிவப்பு நிறத்தில் ரீசேட் ஒன்றினையும் மண்நிறத்தில் நீளக்காற்சட்டையொன்றினையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2000 குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிசென்றுள்ளனர்:காவல்துறைத் திணைக்களம்.

மோசமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2000 குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
|
காவல்துறைத் திணைக்களத்தினால் அண்மைய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் குற்றவாளிகள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும், குறிப்பாக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் தப்பிச் சென்றுள்ளனர். வெளிநாடுகளில் பதுங்கயிருந்த, மோசமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில குற்றவாளிகள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி படகுகள் மற்றும் போலிக் கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. |
இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.அதிமுக உறுப்பினர்கள் மைசைகளைத் தட்டி முதல்வரின் கோரிக்கையை வரவேற்றனர். குறிப்பாக உயரமான உறுப்பினர்கள் படு வேகமாக மேசைகளைத் தட்டியதைக் காண முடிந்தது.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜெயக்குமார், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வருக்கு உறுதியளித்தார்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக