கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் இருந்து வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலையில் காயங்களுடன் உயிரிழந்திருந்த இந்த நபரின் ஆடைகள் சற்று தூரத்தில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை அளுத்கமவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி சடலத்தை கண்டு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
குறித்த நபரின் மரணத்தில் ஏதேனும் மர்மம் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகே மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியைச் சேர்ந்த பிரபல தாதா மார்க் டக்கன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொலிசாருக்கும், டக்கன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரம் மேலும் சில நகரங்களுக்கும் பரவியது. பிரதமர் டேவிட் கமரூன் இத்தாலி பயணத்தை பாதியில் முடித்து லண்டன் திரும்பினார்.

“எந்த விலை கொடுத்தாலும் கலவரத்தை ஒடுக்குவோம்” என அவர் உறுதியளித்தார். கலவரம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்டின் அவசர கூட்டம் நேற்று நடந்தது.
கலவரம் தொடர்பாக நடந்த விஷயங்களை அமைச்சர்கள் பார்லிமென்டில் எடுத்துரைத்தனர். கலவர பகுதிகளில் பணியில் ஈடுபட்ட பொலிசாருக்கு உதவ ஸ்காட்லாந்து பொலிசார் 250 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 300 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை உடனடியாக சிறையில் அடைக்கும் பொருட்டு லண்டன் கோர்ட் நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் இயங்கியது.
கடந்த நான்கு நாள் கலவரத்தில் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இழப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில், கடந்த மாதம் நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக, புல்லட் ரயில்களின் வேகத்தை குறைக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில், 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, புல்லட் ரயில்களுக்கான தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே பீஜிங் - ஷாங்காய் இடையிலான, 1,600 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தற்போது புல்லட் ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த தூரத்தை இந்த ரயில்கள் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.கடந்த மாதம் 23ம்தேதி, ஷிஜியாங் மாகாணத்தில் இரண்டு புல்லட் ரயில்கள் மோதிக்கொண்டதில், 40 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்துக்கு இன்டர்நெட் பிளாக் மூலம் 48 கோடி பேர், அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.இதை தொடர்ந்து, புல்லட் ரயில்களின் வேகத்தை குறைக்க, பிரதமர் வென் ஜியாபோ தலைமையிலான அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.

தற்போது 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்கள், இனி 300 கிலோ மீட்டர் வேகத்திலும், 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் இனி 250 கிலோ மீட்டர் வேகத்திலும், 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் இனி 200 கிலோ மீட்டர் வேகத்திலும், 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இனி 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே துறைக்கு, பிரதமர் வென் ஜியாபோ உத்தரவிட்டுள்ளார்.

அதிவேக ரயில்களின் மூலம், இந்த ஆண்டு ரயில்வே அமைச்சகத்துக்கு 85 சதவீத லாபம் கிடைத்ததாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸில் ஒரு கொள்ளைக்கார கூட்டத்துக்கும் அதிரடிப் படையினருக்குமிடையில் இடம்பெற்ற சண்டை !

செவ்வாய் காலை ஆயுதந்தாங்கிய காவற்துறையினருக்கும் ஒரு கொள்ளைக்கார அதிரடிப் படையினருக் குமிடையில் கடும் யுத்தம் நடை பெற்றுள்ளது. கொள்ளைக்காரர்கள் பெருந்திட்மிடலுடன் இக் கொள்ளையை நடத்தியுள்ளனர்.

இவர்கள் முதன் முதலில் கொள்ளை நடக்க இருக்கும் இடமான Aubagne காவற்துறையினரின் வாகனங்கள் புறப்படும் கதவை சங்கிலி பிணைத்து பெரும் பூட்டொன்றால் பூட்டி விட்டிருந்தனர். இதன் மூலம் அவர்களின் வரவைத் தாமதப்படுத்துவற்காகவே இந்த ஏற்பாட்டைச் செய்தனர். அத்தோடு அவர்கள் இதிலிருந்து புறப்பட்டாலும் மேலும் அவர்களதுபோக்குவரத்தைத் தடுப்பதற்காக, காவற்துறையால் பயன்படுத்தப்படும் வீதி ஆணிகளை அந்தப் பிரந்தியத்தின் வீதியெங்கிலும் கொள்ளைக்காரர்கள் விசிறியிருந்தனர்.

வீதியால் சுற்று வந்த காவற்துறையின் சிறப்புத் தாக்குதற் பிரிவின் (Psig, peloton de surveillance et intervention de la gendarmerie) வாகனம் ஒன்று காவல் நிலையக் கதவு சங்கிலிகொண்டு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டது.
இது அவர்களுக்குச் சந்தேகத்தை உண்டாக்கவே அவர்கள் உடனடியாக பணம் பறிமாற்றம் செய்யும் போக்குவரத்துச் சேவையின் Gémenos இலுள்ள Sazias பணம் பாதுகாக்கப்படும் இடத்தை நோக்கி விரைந்தனர். இதே முறையிலேயே கடந்த ஏப்ரல்12 Valence (Drôme) இலுள்ள LOOMIS பணச் சேமிப்பு நியைம் தாக்கிக் கொள்ளiயிடப்பட்டது. இதுவே உடனடியாகக் காவற்துறையின் சிறப்புப் படையினரை Sazias நிலையத்தை நோக்கிச் செல்ல வைத்தது.

அவர்கள் அங்கு சென்றபோது அங்கு பெரும் கனரக ஆயுதங்களுடன் கொள்ளயைர்கள் படையொன்று காத்திருந்தது. அங்கு சென்ற காவற்துறையினர் மீது கடுமையான தாக்குதலைக் கொள்ளையர்கள் மேற்கொண்டனர். இரு பகுதிக்குமிடையில் பலத்த துப்பாக்கிப்பிரயோகம் நடைபெற்றது.

சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் நிறுத்தப்பட்டன. அந்த இடைவெளியில் கொள்ளையர்கள் பின் வழியால் தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் கொள்ளைக்குப் பாவித்த 7வாகனங்களும் சிறிது தூரத்தில் எரிக்கப்பட்டபடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவற்துறையின் தடயவியற் பிரிவினர் கொள்ளயைர்களின் பல தடயங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் அரம்பிக்கப்பட்டுள்ளன.
இதே போன்ற கொள்ளகைள் பல நடந்துள்ளன். இதே நிறுவனமான Gémenos இலுள்ள Sazias 2007 ல் கொள்ளையிடப்பட்டு பத்து மில்லியன் யூரோக்கள் கொள்ளயிடப்பட்டன.

4 ஜனவரி 2010ல் பணம் வங்கிக்குக் கொண்டு செல்கையில் கொள்ளயைர்களின் தாக்குதற்பிரிவு இரு வாகனங்களில் கனரக ஆயுதங்களுடன் வந்தது. அதில் ஒன்றில் காவற்துறையினரின் அவசர ஒளிஒலிக் கருவியும் பூட்ப்பட்டிருந்தது. பண வாகனத்தை இடைமற்த்த இவர்கள் உந்துகணை செலுத்தி (gyrophare) மூலம் தாக்கிக் கதவைத் திறந்து 4 மில்லியன் யூரோக்களைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றிருந்தனர்
பிரான்ஸ் அதிவேக தொடருந்தில் குழந்தை பெற்ற 22 வயது பெண்:TGVயில் 18 வயது வரை பயணிக்க இலவசம்!

Bordeaux- Paris இணைக்கும் அதிவேகத் தொடருந்தில் (TGV)Coutras (Gironde) தொடருந்து நிலையத்தருகில் 22 வயதுப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
பிரயாணிகளுள் பயணம் செய்த ஒரு மருத்துவர், ஒரு மருத்துவத் தாதி மற்றும் ஒரு உதவித் தாதி ஆகியோர் இந்தப் பிரசவத்தைச் சிக்கலின்றிச் செய்து முடித்தனர். குழந்தை காலை11h00 மணியளவில் பிறந்துள்ளர். தொடருந்து கிட்டத்தட்ட 30நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு அவசர முதலுதவிப்படையினரும் வந்து சேர்ந்நனர். தாயும் சேயும் நலமாக பிரசவம் முடிவடைந்தது. இதன் பின்னர் இவர்கள் அவசர முதலுதவிப்படையினர் மூலம் Libourneஇலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

பிறந்த குழந்தைக்குப் பரிசாக பிரான்ஸ் தொடருந்து சேவையினர் (SNCF) ஒரு விசேட சலுகையை வழங்கியுள்ளனர். பிறந்த குழந்தை 18 வயதடையும் வரை பிரன்சிற்குள் அனைத்து அதிவேகத் தொடருந்துகளிலும் (TGV, Téoz et Lunéa)இலவசமாகப் பயணிக்கமுடியும் என்ற சலுகையைத் தமது பரிசாக வழங்கியுள்ளனர்.

உலகின் எந்த மூலையானாலும், ஏவுகணைகளை விட வேகமாகச் சென்றடையக் கூடிய வானூர்தி தொழில்நுட்பத்தை, அமெரிக்கா தயாரித்திருக்கிறது. இந்த முன்னணி திறன் கொண்ட வாகனத்திற்கு,"பால்கன் எச்டிவி-2' என பெயரிடப்பட்டிருக்கிறது.அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, "பால்கன் எச்டிவி-2' என்ற ஆளில்லாமல் பறக்கக்கூடிய ஏவுகணை போர் விமானம், 21 ஆயிரத்து 580 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது.
ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போர் விமானம், கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ரீதியாக இயக்கப்பட்டு ÷தால்வியடைந்தது.பொதுவாக, "சூப்பர் சானிக்' என்பது, ஒலியை விட வேகமாகச் செல்லும் வானூர்தி ஆகும். ஆனால் இது, "ஹைபர் சானிக்' என்றழைக்கப்படுகிறது. ஒலியை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டது. பொதுவாக நியூயார்க் முதல், லாஸ் ஏஞ்சல்ஸ் வரை ஜெட் விமானத்தில் பயணம் செய்ய ஆகும் அந்த நேரத்தை, இந்த ஏவுகணை ஊர்தி 12 நிமிடத்தில் கடக்கும் திறன் கொண்டது.
அமெரிக்காவின் இந்த, "ஹைபர் சானிக் தொழில்நுட்பம்' முழு வெற்றி பெற்றால், விண்வெளியில் பயணம் என்பது மேலும் எளிதாகும். அத்துடன் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பமும் மேலும் வலுப் பெறும்.
முரண்டு பிடிக்கும் எதிரி நாடுகளை, தன் ஏவுகணைகளால் சில நிமிடங்களில் பணிய வைத்து விடும்.கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து மினோடார் என்ற ராணுவ ராக்கெட் மூலம், "பால்கன்' விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது. ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த இச்சோதனை முழு வெற்றி பெற்றால், வரும் 2025ம் ஆண்டு இந்த பால்கன் வாகனம் பயன்பாட்டிற்கு வரும்.
வேலை பார்க்கும் இடங்களில் சக ஊழியர்கள் கன்னத்தில் முத்தமிட தடை


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக