முற்றுகைப் போராட்டத்தின் மூலம் கச்சதீவுக்குள் உள்நுழைவதனைத் தடுக்கும் வகையிலான அனைத்து எற்பாடுகளுடனும் தயாராக இருக்குமாறு கடற்படை, விமானப்படை ஆகியனவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.டோல்ரன், சிவா மேகநாதனையும் வேறு 155 தமிழ் ஏதிலிகளையும் காப்பாற்றி 25 வருடங்களின் பின்னர் டோல்ரனும் மேகநானும் மீண்டும் சந்தித்துள்ளனர்.
நியூ பவுண்ட்லாந்தின் கரையில் தத்தளித்துக் கொண்டிருந்த 155 தமிழர்களை உயிர்காப்புப் படகுகளில் சென்று கஸ் டோல்ரன் காப்பாற்றியிருந்தார்.
3 நாட்களாகத் தவித்துக் கொண்டிருந்தவர்களது படகுகளை டோல்ரனின் மீன்பிடிப் படகுதான் முதலில் கண்டிருந்தது.
கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்குப் பின்னர் பல உயிர்களைக் காப்பாற்றியதற்காகக் கனேடிய தமிழ் அமைப்பினால் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் அன்று குளிராலும் நீரின்றியும் எதுவுமேயில்லாமல் படகில் தவித்துக்கொண்டிருந்தோம். எங்களை மீனவர்கள் கண்டிராவிடின் நாங்கள் எல்லோரும் இறந்திருப்போம் என்றார் மேகநாதன்.
டோல்ரனின் மகள் இதுபற்றிக் குறிப்பிடும்போது, ‘கனடாவில் இத்தமிழர்கள் நன்றாகவும் பாதுகாப்பாகவும் தமது சமூகத்துடன் ஒன்றியும் வாழ்வதையிட்டு எனது தந்தை மிக மகிழ்ச்சியடைந்துள்ளார்’ என்றும் ‘கனடாவில் நாங்கள் வாழ்வதையிட்டுப் பெருமைப்படுகின்றோம்’ என்றும் கூறினார்.
பிரான்சில் பட்டப் பகலில் 13 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு.ஓகஸ்ட் 4ம் திகதி Marseille ஒரு 13 வயதுச் சிறுமி பட்டப் பகலில் நட்டநடு வீதியல் பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்டுள்ளார். இது Marseille 3வது பிரிவில் அமைந்துள்ள Centre Ville ற்கு அருகாமையிலுள்ள boulevard Nationalல் 17h00 மணியளவில் நடந்துள்ளது.
உலாவச் சென்ற சிறுமி திரும்பி வந்தபோது தாயிடம் வயிறு வலிப்பதாகக் கூறிவிட்டு நினைவிழந்து விழுந்து விட்டார். உடனடியாக Timone குழந்தைகள் வைத்தியசாலைக்குச் சிறுமி எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுமியைச் சோதித்த வைத்தியர் சிறுமி மோசமான பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
உடனடியாகத் தாய் காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் உடனடியாகக் காவற்துறையினரால் சிறுமியிடம் வாக்குமூலம் பெற முடிய வில்லை. பின்னர் ஒரு உளவியல் மருத்துவ நிபுணரின் உதவியுடனே காவற்துறையினர் சிறுமியிடம் பேச முடிந்தது.
சிறுமியின் விளக்கங்களிலும் அவர் கொடுத்த சாட்சியங்களிலும் சிறுமியை மூவர் தடுத்து மடக்கியுள்ளனர். வீதியருகில் சிறுமி விழுந்தவுடன் மூவரும் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். சிறுமியால் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.
இப்படியான இந்த வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது Marseilleல் மிகமிக குறைவாகவே நடந்துள்ளது எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். இன்னமும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க அவர்கள் மாதிரிப் படம் வரையப்படவில்லை. ஆனாலும் மரபணுத் தடயங்கள் பெறப்பட்டுள்ளன. இவ் விசாரணையை காவற்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவும் சிறுவர்கள் பாதுகாப்புப் பிரிவும் பொறுப்பேற்றுள்ளன.
சிறுமிகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி குறைந்தவர்களாகவே இருக்கின்றனர். இதனாலேயே எமது கலாச்சாரத்தில் தாய் எப்போதுமே பாடசாலை தவிர்ந்த வேறெங்காவது பிள்ளைகள் போகும் போது தாமும் கூடவே போவது வழக்கம். இதைச் சிலர் விமர்சிப்பதும உண்டு. ஏன் பிள்ளைகள் கூட இதை விரும்புவதில்லை. இருப்பினும் தாயானவள் தன கடமையைச் செய்யத் தவறுவதில்லை. இதுவே எம் பெண்களுக்குப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது.
இருப்பினும் இன்னமும் சிலர் உழைப்பில் காட்டும் ஆர்வத்தைப் பிள்ளைகள் மீது காட்டத் தவறுகிறார்கள். இது மோசமான பின்விளைவுகளைச் சில நேரம் ஏற்படுத்திவிடும்.
அத்தோடு பிள்ளைகளுக்கு முக்கியமாகப் பெண் பிள்ளைகளுக்குத் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்கவேண்டும். இது அவர்களுக்குப் பாதுகாப்பளிப்தோடு தன்னம்பிக்கையையும் பெரிதளவில் வளர்த்துவிடும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக