இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன். அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன்.
அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.இராசிவ்காந்தி அவர்களின் மனைவி சோனியா அவர்களும் இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாகக் கூறினார். இவர்களின் உயிரைக் காக்க நான் மேற்கொண்ட அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.
அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன்.
தங்களின் பரந்த மனத்தோடு, மனிதநேய அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் இம்மூவர் உயிர் காக்க வேண்டுகிறேன்.
இந்த மனிதநேயச் செயலுக்கு வையம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.
தங்களின் நல்லாட்சி சிறக்கவும் தங்களின் புகழ் பரவவும் அந்தக் கடவுள் உங்களுக்கு அருள்வாராக!
வாழ்த்துகளுடன்
தங்கள் உண்மையுள்ள,
(வி.ஆர். கிருஷ்ண அய்யர்)
பெறுநர்
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா
முதல் அமைச்சர், தமிழ்நாடு
போயஸ் தோட்டம்
சென்னை
தமிழ்நாடு.
நீதிக்கான போராட்டங்கள் எப்போதுமே வலியும், துயரமும் நிறைந்த பயணங்களாக இருக்கின்றன. நீதியற்றவர்கள் அதிகார பீடங்களின் போதையை சுவைப்பதற்காக பலியிடப்படுவது குற்றமற்றவர்களும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை உடைக்கிற வாய்ப்பற்றவர்களும்.
தடா சட்டத்தில் படி நடந்த ராஜீவ் கொலை வழக்கு மற்ற வழக்குகள் போன்றதல்ல. இந்திய குற்றவியல் சட்டத்தின் அடைப்படையிலான மற்ற வழக்குகளைப் பொறுத்த வரையில் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், காவல்த்துறை பெற்ற வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் மறுத்து உடைக்க முடியும். சம்பந்தப்பட்டவர் தான் குற்றம் செய்தார் என்பதை சாட்சிகள் மற்றும் தரவுகளின் மூலம் சட்டப்படியான வாதங்களின் அடிப்படையில் நிரூபிப்பது குற்றம் சுமத்துபவரது கடமை. அப்படி நிரூபிக்காமல் போகிற போது குற்றம் சுமத்தப்பட்டவர் விடுதலை ஆகிவிடுவார். இது சாதாரண குற்றவியல் நடைமுறை. இதை தான் ஆங்கிலத்தில் innocent until proven guilty என்பது.
ஆனால் தடா வழக்கு அப்படியானது அல்ல. அதற்கு நேர்மாறானது. காவல்த்துறையால் பதிவு செய்யப்படுகிற வாக்குமூலங்கள் அவை பெறப்பட்ட சூழ்நிலைகளை (சித்திரவதை, அச்சுறுத்தல், ஆசைகாட்டுதல்...) கருத்தில் எடுக்காமல் அப்படியே ஏற்கப்படும். அவற்றை மறுத்து, திரும்ப பெறுகிற வாய்ப்பு கிடையாது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிறப்பு புலனாய்வுத்துறையின் கடும் சித்திரவதைகளில் கட்டாய வாக்குமூலம் பெறப்பட்டவர்கள். நீதிமன்றத்தில் அவற்றை திரும்ப பெறுகிற வாய்ப்பை இழந்தவர்கள். மற்றொரு முக்கியமான விசயம், தடா வழக்கை பொறுத்த வரையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அவரே தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றம் சுமத்துகிற தரப்பிற்கு வேலை எளிது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கடுமையான பாதுகாப்பிற்குள், கடுமையான சட்டத்தின் பிடியில் வாய்ப்புகளும், நீதியான உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை உடைப்பது சாத்தியமானதோ, எளிதானதோ அல்ல. தடா வழக்கைப் பொறுத்த வரையில் வழக்கமான சட்ட நடைமுறைக்கு மாறாக guilty until proven innocent என்கிறது.
ராஜீவ் கொலை வழக்கை இந்திய குற்றவியல் மற்றும் தண்டனை சட்டங்களில் விசாரித்திருக்க வேண்டும். தடா வழக்கில் விசாரித்தது அப்பட்டமான மனித உரிமை மறுப்பு செயல். சிபிஐ புலனாய்வைப் பொறுத்த வரையில் முடிவை எழுதிவிட்டு காதாப்பாத்திரங்களை உருவாக்குவது போல சிபிஐ குழறுபடியும், குழப்பமும், வெளிப்படையின்மையும், புரட்டும் நிறைந்த புனைவுகளை விசாரணை ஆக ஆக்கியது.நீதிமன்றம் தடா சட்டத்தின் அடிப்படையில், சிபிஐ புனைந்த புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் விசாரித்து தீர்ப்பெழுதியது. அதனடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் 21 பேருக்கு நீதிமன்றக் கொலை(தூக்குதண்டனை) விதித்தது.
மேல்முறையீட்டில், உச்சநீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்தது. சோனியா 4 பேரின் தண்டனையை குறைக்குமாறும் "தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அவர்கள் 4 பேரும் கொல்லப்படுவது விருப்பமல்ல" என்றும், குறிப்பாக நளினியின் தண்டனையை குறைக்குமாறும் கடிதம் ஒன்றை 05.12.1999 அன்று குடியரசுத் தலைவருக்கு எழுதியிருந்தார்.
அதனடிப்படையில், நளினிக்கு மட்டும் தண்டனை குறைக்கப்பட்டது. இந்திய மக்கள் பார்வையில் சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் தண்டனை குறைப்பு வழங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆளுகின்ற காங்கிரசும், பிரதமரும், குறிப்பாக 3 பேரின் தண்டனை குறைப்பு மனுவை நிராகரித்து நீதிமன்றக்கொலையை உறுதிசெய்ய பரிந்துரைத்த உள்துறையும் சோனியாவின் வழிகாட்டுதலில் தான் இயங்குகின்றனர். நீண்டகால காங்கிரஸ் உறுப்பினரான குடியரசு தலைவர் சோனியா வழிகாட்டுகிற அரசிற்கு இணக்கமாக இயங்குபவர் என்பதையும் குறிப்பிட அவசியமில்லை.
வன்னிப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோருகிற அழுத்தம் ஒருபக்கமும், ஊழலில் குளித்து கும்மாளம் போடுகிற அரசுக்கு நெருக்கடிகள் மறுபக்கமுமாக இருக்கிற மிகவும் நேர்மையற்ற, வெளிப்படையற்ற அரசு சிலரை கொலை செய்தாவது பிரச்சனைகளிலிருந்து தப்பித்து ஓட முனைகிறது. தவறான சட்டத்தின் அடிப்படையில், தவறான விசாரணை மூலம் தவறான தீர்ப்பை எழுதி குற்றமற்றவர்களை கொலை செய்வது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
இத்தண்டனை நிறுத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது வரையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களை தண்டிப்பது எவ்வகையிலும் நீதியானது அல்ல. நீதிக்கு புறம்பானவையே.
பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது பேஸ்புக் சேவையை 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது.
எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன.
' ஒபரேஷன் பேஸ்புக்' என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது.
இது வெறும் புரளியெனக் கூறியுள்ள இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகவலை மறுத்துள்ளன.
இருந்த போதிலும் குறித்த குழுவே கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.
பேஸ்புக் தொடர்பில் கடுமையாக சாடியுள்ள அவ்வமைப்பு ஷூக்கர் பேர்க் எமது விபரங்கள் மற்றும் தகவல்களின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
நமது தகவல்களை பேஸ்புக் அரசாங்கம் மற்றும் உளவு நிறுவங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
பொதுவாக 'Anonymous' குழு ஓர் இணையக் கட்டமைப்பினைத் தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இது தொடர்பிலான அறிவிப்பினை மேற்கொள்ளும்.
இந்நிலையில் தற்போது பல நாட்களுக்கு முன்னரே அக்குழு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது
எவ்வாறாயினும் இச் செய்தியானது பேஸ்புக் பாவனையாளர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவின் பயங்கரமான உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், பாரிய தனிநபர் தரவுகளின் தொகுப்பெனவும், இது அதன் பாவனையாளர்களால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் அமெரிக்க உளவுச் சேவைக்கு பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ரஸ்ய நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யாஹூ உட்பட மற்றைய பெரிய அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுகின்றன.
பாவனையாளர்கள் புதிய நண்பர் ஒருவரை பேஸ்புக்கில் இணைக்கும்போது அவர்கள் தாமாகவே அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுவதுடன் அவர்களுக்கான தரவுத்தளத்தினையும் பெருக்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
செவ்வியின் நிறைவுப் பகுதியில் ஊடகங்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக