புதன், 17 ஆகஸ்ட், 2011

16.08.2011 இன் சிறப்பு செய்திகள்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்கிற கிராமத்தில் மாரியம்மனுக்கு கோவில் எடுத்து பூசை நடத்துகின்றார் முஸ்லிம் பெண் ஒருவர்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்கிற கிராமத்தில் மாரியம்மனுக்கு கோவில் எடுத்து பூசை நடத்துகின்றார் முஸ்லிம் பெண் ஒருவர்.

ஆலயத்தின் பெயர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில். முஸ்லிம் பெண்ணின் பெயர் பஷீரா. சொந்த செலவில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்கின்றார். தீபா ஆராதனை, பூசை என்று அத்தனை சடங்குகளையும் காலையும், மாலையும் இவரே நடத்துகின்றார். பர்தா அணிந்து கொண்டுதான் வழிபாடுகள் மேற்கொள்கின்றார்.

இவர் பூசைக்கு உரிய மந்திரங்களை பக்கத்து ஊர்க் குருக்கள் ஒருவரிடம் இருந்து கற்றுக் கொண்டார்.
கையில் அம்மன் படத்தை பச்சை குத்தி வைத்து இருக்கின்றார். இவரது கனவில் பத்து வருடங்களுக்கு முன்னர் அம்மன் தோன்றி இருக்கின்றார். கோயில் கட்டச் சொல்லி திருவாய் மலர்ந்து இருக்கின்றார். ஆரம்பத்தில் கருங்கல்லால் ஆன அம்மன் சிலை ஒன்றை மட்டும் வைத்து வழிபட்டு வந்தார். பின்னர் வெண்கலச் சிலை வைத்துக் கும்பிடலானார். வேப்ப மரம், சூலாயுதம், சிறு தெய்வங்களின் சிலைகள் என்று ஆலயத்தில் அமர்க்களம். இவரின் வீடு இருக்கின்ற தெருவில் மற்ற எல்லோரும் இந்துக்கள். ஆலயத்தை தினமும் தரிசிப்பார்கள். பஷீராவின் இவ்வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு கணவர் ஜின்னா பக்க துணையாக இருந்து வருகின்றார்.

ஆனால் பஷீராவின் அம்மன் வழிபாடு உறவினர்களுக்கும், பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் பிடிக்கவே இல்லை. ஏனெனில் உருவ வழிபாட்டை இஸ்லாம் தடை செய்து உள்ளது. பஷிராவை உறவினர்கள் கழித்து வைத்து இருக்கின்றார்கள்.
பிள்ளைகளுக்கு பஷீரா மணமக்கள் தேடிச் செல்கின்றபோது அம்மன் வழிபாடு சம்பந்தப்பட்ட விடயம் பூதாகரமாகி திருமணங்கள் ஆரம்பப் பேச்சுக்களிலேயே குழம்பி விடுகின்றன.அதே நேரம் முஸ்லிம் கடும்போக்காளர்களால் இவருக்கு படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை ஒன்றும் அம்மன் மீதான பஷீராவின் பக்தியை குலைக்கவே இல்லை.

இத்தனைக்கும் பஷீரா மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். ஓலைக் குடிசை ஒன்றில்தான் வசிக்கின்றார்கள். கணவர் பரோட்டா கடை ஒன்றை நடத்துகின்றார்.

ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கின்ற இடம்கூட பூராசாமி மானியம் என்கிற அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானதாகவே இருந்தது. இவர் அம்மனுக்கு சிலை வைத்து கும்பிடுகின்றமையை அறிந்த அறக்கட்டளைக்காரர்கள் நிலத்தை இவருக்கு கொடுத்து உள்ளார்கள். சமய நல்லிணக்கத்துக்கு இந்த ஆலயம் நல்ல ஒரு முன்னுதாரணமாக உள்ளது.



மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சென்னை மாநகரத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டு உள்ளது.
இக்கோவிலை கலைவாணன் - சாந்தி தம்பதி அமைத்துக் கொடுத்து உள்ளது. ஆலயத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தமிழ் நாடு எங்கும் இருந்து நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆலயத்தை தரிசிக்க வந்து இருந்தனர். நடிகர் மயில்சாமி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், எம்.ஜி.ஆர் கட்சித் தலைவர் கா. லியாகாத் அலிகான், இதயக்கனி ஆசிரியர் எஸ். விஜயன் போன்றவர்களும் வருகை தந்து இருந்தார்கள்.

மும்பையில் ஈரான் நாட்டு கொடியுடன் வந்த மர்மக் கப்பலை கைப்பற்றிய இந்திய கப்பற்படையினர்.


மும்பை கடல் பகுதியில் காணப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை இந்தியக் கப்பற் படையினர் திங்கள்கிழமை வளைத்துப் பிடித்துள்ளனர். மேலும் அதில் இருந்த 9 பேரை அவர்கள் கைது செய்தனர்.

ஈரான் நாட்டுக் கொடியுடன் மும்பையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் நின்றிருந்த அந்தக் கப்பல் குறித்து இந்தியக் கப்பற் படையினருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனடியாக செயல்பட்ட இந்திய கப்பற் படையினர், இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஐஎன்எஸ் மைசூர் என்ற ஏவுகணை அழிப்பு வசதி கொண்ட கப்பல், இரு ஹெலிகாப்டர்கள், 24 கமாண்டோக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏமன் நாட்டைச் சேர்ந்த 5 பேர், தான்சானியாவை சேர்ந்த 2 பேர், கென்யா, சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவர் அந்தச் சரக்கு கப்பலில் இருந்தனர். நஃபிஸ்-1 என்ற இந்த சரக்கு கப்பல் கடத்தி வரப்பட்டதா, அதில் உள்ள அனைவரும் கடத்தல்காரர்களா அல்லது பணியாளர்களா என்று உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை என பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மனோகர் நம்பியார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஜூலையில் ஈரானின் சா பார் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டுள்ள இந்தக் கப்பல், கடத்தல் பொருள்கள் அல்லது போதைப் பொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படலாம்
என புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


காதலுக்கு கண்கள் இல்லை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மை தான் போல் தெரிகிறது.

இப்போதெல்லாம் காதலுக்கு கண்கள் இல்லை. இதனை உலகில் பல ஜோடிகள் நீருபித்துள்ளன.

அதைப் போல் இங்கேயும் ஒரு ஜோடிகள் காதலுக்கு கண்கள் இல்லை என்று நீருபித்துள்ளார்கள்

இந்த ஜோடி அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இந்த ஆணின் பெயர் ஓநியல் இவரின் உயரம் 7அடி 1 இஞ் ஆகும். அந்த பெண்ணின் பெயர் நிகோலி கூப்ஸ். ஆனால் இந்த பெண்ணின் உயரம் ம் 5 அடி 2 தான். இவர்கள் இருவரும் மிகவும் அந்நியோன்னியமாக இருக்கிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த லோனி போச்சார்ட்(வயது)19 தன் பாலியல் தேவைக்காக 14 வயது சிறுவனை வாங்கி பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்!

அமெரிக்காவை சேர்ந்தவர் லோனி போச்சார்ட். இவருக்கு 19 வயது.

இவர் வறிய தாய் ஒருவரிடம் இருந்து அவரது 14 வயது மகனை தான் வளர்க்கப்போவதாக கூறி தத்தெடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு தத்தெடுத்த அந்த சிறுவனை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் சுகத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளார் லோனி போச்சார்ட்.

இந் நிலையில் அந்த வறிய தாய் மகனை பார்ப்பதற்காக லோனி போச்சார்ட்டின் வீட்டிற்கு வந்துள்ளார். மகனை பார்த்த தாய் அவன் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த சிறுவனின் தான் போலீசில் புகார் செய்த்துள்ளார்.

போலீசார் லோனி போச்சார்டிடம் விசாரணை நடத்தினர். இதில் லோனி போச்சார்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த 65 வயது முதியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில்.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியருக்கு, அமெரிக்க கோர்ட் 1 வருடம் சிறை தண்டனை விதித்தது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிப்பவர் ரமேஷ் அத்வானி (65). இவர் கடந்த ஆண்டு மே மாதம் ஹாங்காங் - நேவார்க் இடையேயான விமானத்தில் சென்றார்.

இவரது பக்கத்து சீட்டில் ஒரு பெண் இருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த பெண் தூங்கி விட்டார். அப்போது ரமேஷ் ஒரு போர்வையை எடுத்து அந்த பெண்ணின் மீது போர்த்திவிட்டு அவரிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டார்.

இதையடுத்து கண்விழித்த அந்த பெண், கூச்சல் போட்டார். பின் பைலட்டிடம் சென்று புகார் கூறினார். இதையடுத்து ரமேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் கோர்ட், ரமேஷுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

தலையை அறுத்து சமைத்த மீன் உயிரேடு துள்ளுகிறது. ஜப்பான் ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு த்ரில் அனுபவம்.

பிரியாணியில் இருந்து சிக்கன் பீஸ்களும் மட்டன் பீஸ்களும் திடீரென்று தட்டில் இருந்து எகிறி குதித்தால் எப்படி இருக்கும்.. ஜப்பானில் ஒரு ஓட்டலில் இந்த அதிசயம் நடக்கிறது. தட்டில் போட்டு டேபிளுக்கு கொண்டு வந்த பிறகு, எம்பிக் குதிக்கும் கணவாய் மீன் டிஷ்சை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ளது ஹக்கோடேட் நகரம்.

இங்குள்ள இக்கடேய் டபிஜி என்ற ஓட்டலில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உணவு ஐட்டம் ‘ஒடோரி டான்’. ‘டான்ஸ் ஆடும் கணவாய்’ என்பது இதன் அர்த்தம். ஜப்பானில் சுஷி என்பது பிரியாணி போன்ற உணவு வகை. வினிகர் கலந்த சாதத்தை வடித்து அதோடு மீன், சிக்கன் போன்ற கிரேவிகளை கலந்து தயாரிப்பது. பெரும்பாலும் மீன், நண்டு, இறால் போன்ற கடல் உயிரினங்களே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒடோரி டான் தயாரிக்க கணவாய் மீன் பயன்படுத்துகின்றனர்.

‘‘லைனுக்கு ஒடேரி டான் ஒண்ணேய்..’’ என்று சப்ளையர் குரல் கொடுத்ததும் தண்ணீரில் இருந்து பிரெஷ்ஷாக கணவாய் மீனை எடுக்கிறார் சமையலர். முழுவதுமாக இறந்துவிடாதபடி தலையை அறுக்கிறார். சுடச்சுட தட்டில் போட்ட சுஷி பிரியாணியின் மீது நடுநாயகமாக கணவாயை அமரவைக்கிறார். உடனே டேபிளுக்கு செல்கிறது இந்த ஒடோரி டான். சோயா சாஸ் எடுத்து இதன் மீது ஊற்றினால்.. கணவாயின் கைகள் திடீரென்று அசைகின்றன. எழுந்திருக்க முயற்சி செய்யும் கணவாய் லேசாக எம்புகிறது. ‘வாவ்’ என்று வாய் பிளந்து முடித்ததும் மீண்டும் தட்டோடு எடுத்துக்கொண்டு சமையக்கட்டுக்கு போகிறார்கள். கிரேவி சேர்த்து கொதிக்கவிட்டு மீண்டும் தருகிறார்கள்.

விலை ரூ.1,150 இதுபற்றி ஓட்டல் தலைமை சமையலர் கூறுகையில், ‘‘தலை வெட்டப்பட்ட நிலையிலும் அதன் உடலில் சற்று உயிரோட்டம் இருக்கும். அதன் மீது சோயா சாஸ் ஊற்றும்போது, அதில் இருக்கும் சோடியம் அயனிகள் வினை புரிவதால் கணவாயின் நரம்பு செல்கள் தூண்டப்பட்டு லேசாக எழும்புகிறது’’ என்றார். வாடிக்கையாளர்களுக்கு த்ரில் அனுபவம் தரவே இந்த ஏற்பாடு என்று சொல்லும் இக்கடேய் டபிஜி ஓட்டல் நிர்வாகம் ஒடேரி டான் ஐட்டத்துக்கு காப்பிரைட் வாங்கி வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com