காணமற்போன இலங்கையர்களைக் கண்டு பிடிப்பதற்கு றேசிங் (tracing) என்ற புதிய திட்டம் ஒன்றை இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் காணாமற்போன இலங்கையர்களைக் கண்டு பிடிப்பதற்காகவே இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச்சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கென நேற்று(02.09.2011) வெள்ளிக்கிழமை வடபகுதிக்கு விஜயம் செய்த இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், யாழ்.கிளையில் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களுக்கு நடத்தினர்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் யாழ்.கிளையின் 15 பிரிவின் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
காணாமல் போனவர்களது உறவினர்கள் அவர்கள் குறித்த விபரங்களை செஞ்சிலுவைச் சங்கப் பிரிவிற்கு தெரியப்படுத்தி உதவுமிடத்து யாழ்.கிளையூடாகக் கொழும்புக்கு இந்தத் தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து காணாமற்போனவர்களை கண்டுபிடிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
தொடர்ந்தும் இந்த அதிகாரிகள் குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
தொடர்ந்தும் இந்த அதிகாரிகள் குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் 11 குழந்தைகள் பலி.
ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களில் 11 குழந்தைகள் பலியாகியுள்ளன.
ஆனால், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் வழங்கும் 4 வென்டிலேட்டர்களில் 2 செயல்படவில்லை என்பதும், இந்த வார்டில் பணியில் இருக்க வேண்டிய 25 நர்சுகளில் 5 பேர் மட்டுமே பணியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் மாதத்துக்கு 50 குழந்தைகள் வரை பலியாவதாக ஏற்கனவே புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலக யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட விமானம் நெடுஞ்சாலையில் தறையிறங்கியது!
இரண்டாம் உலக யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட Mustang P 51விமானம் உல்லாச விமானமாக Dijonல் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இது நேற்று Bergerac (Dordogne) ல் இருந்து Bordeaux நோக்கிப் பறப்பில் ஈடுபட்டிருந்தது. இவ் விமானம் Saint-Mexant (Corrèze) கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருக்கும் போது இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியது. விமானி அவசர அவசரமாக விமானத்தை A89நெடுஞ்சாலையில் தரையிறக்கியுள்ளார்.

எந்தவிதமான உயிரிழப்புகளோ விபத்தோ இன்றி விமானம் நெடுஞ்சாலையில் தறையிறங்கியது. நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டோடு வந்தபடியால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
விமானி வயல் வெளிக்குள் தரையிறக்கவே முயற்சித்துள்ளார். இயங்க மறுத்த இயந்திரம் விமானி வயல் வெளிக்குள் இறக்க முயன்றபோது திடீரென ஒரு முறை இயங்கி மறுபடி நின்று விட்டதால் தரையிறக்க முடியாது போய்விட்து. “ நான் வயல் வெளிக்குள்ளேயே இறக்கியிருக்க வேண்டும். நான் முடிவை மாற்றியதாலேயே நெடுஞ்சாலையில் தறையிறக்கவேண்டி வந்துள்ளது. ஒரு விமானி பறப்பில் ஈடுபட்டிருக்கும் போது எடுக்கும் முடிவை மாற்றக் கூடாது. உடன் செயற்படுத்த வேண்டும்.” என 52 வயதான அந்த விமானி தெரிவித்தார்.
இவ்விமானி மொத்தமாக 3 200 மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்தவர். இவர் பொழுது போக்காக விமானம் ஓட்டினாலும் இவர் ஒரு இராணுவ வீரராவார். விமானம் தறையிறங்கியதும் காவற்துறையினரும் முதலுதவிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். விபத்துக்கள் இல்லாமையால் அவர்கள் வேலை சுலபமாகியது. இருப்பினும் A89ன் இரு புறங்களும் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு விமானம் அகற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக